தீவன ஊழல் வழக்கில், தண்டனை அறிவிப்பு மீண்டும் ஒத்திவைப்பு.. என்ன நடக்கிறது லாலு வழக்கில்?
கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கான தண்டனை அறிவிப்பை இன்று மீண்டும் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இன்று தண்டனை விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இன்றும் தண்டனை விபர அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1990-ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பாட்னா ஐகோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லல்லு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லல்லு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட மொத்தம் 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பல நீதிமன்றங்களையும், கட்டங்களையும் தாண்டி இந்த வழக்கு, ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் 21 ஆண்டு கால விசாரணைக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அதேவேளையில் பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உட்பட 7 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து, லல்லு சிறையிலடைக்கப்பட்டார். அவருக்கான தண்டனை விபரங்கள் நேற்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்த வழக்கில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் விந்தேஷ்வரி பிரசாத் திடீரென மரணமடைந்ததாக தகவல் வந்தது. இதனையடுத்து, 16 பேருக்கான தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படாமல் நாளை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications