காளிங்க நாகத்தின் மறு பிறப்பு மோடி.. தரம் தாழ்ந்த விமர்சன கோதாவில் குதித்த லாலு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: கிருஷ்ண அவதாரத்தில் தோன்றிய காளிங்க நாகத்தின் தற்கால மறுபிறப்பே பிரதமர் நரேந்திர மோடி என்று ராஷ்டிரிய ஜனதா தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்தார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட கோரி பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று லாலு பிரசாத் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

Lalu Prasad calls Narendra Modi 'Kaliya Naagam'

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் தொகை 3 மடங்கு அதிகரித்துள்ளது. எனவேதான், ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட மத்திய அரசு மறுக்கிறது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இடஒதுக்கீடுகளை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மக்களை கொன்று குவித்த, காளிங்கன் நாகத்தை பகவான் கிருஷ்ணர் தோற்கடித்தார். அந்த நாகம் மறு அவதாரம் எடுத்து மோடியாக பிறந்துள்ளது. அது ஒட்டு மொத்த பீகாரையும் கடிக்க பார்க்கிறது. அந்த நாகத்தை மக்கள் நசுக்குவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+