மோடி அரசை தூக்கி எறிய மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: லாலு பிரசாத்
கொல்கத்தா: மத்தியில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசை தூக்கி எறிய மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வராக 2-வது முறையாக மமதா பானர்ஜி இன்று பதவியேற்றார். கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில் லாலு பிரசாத் யாதவும் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:
பீகாரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் சங் பரிவாரங்களை (பாஜக) தோற்கடித்திருக்கிறார் மமதா பானர்ஜி. கடந்த 2 ஆண்டுகாலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்கு மோடி அரசு எதுவும் செய்யவில்லை.
நாட்டு மக்களிடையே பிளவையும் வெறுப்பையும் தூண்டுகிற பேச்சுகளைத்தான் பரப்பி இருக்கிறார்கள். இந்த தருணத்தில் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி மத்தியில் ஆளும் பாஜக அரசை தூக்கி எறிவதற்கான வியூகங்கள் வகுக்க வேண்டும்.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
இருப்பினும் யார் இதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள்? என்பது உள்ளிட்ட விவரங்களை லாலு பிரசாத் விவரிக்கவில்லை. கடந்த பீகார் சட்டசபை தேர்தல் முடிவடைந்த போதும் இதேபோன்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்றான ஒரு அணியை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications