ஊழல் பணத்தில் பெரும்பங்கை சுருட்டிவிட்டு 17 ஆண்டுகளாக சிபிஐயிடம் சிக்காத லாலுவின் மாஜி உதவியாளர்
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் முன்னாள் உதவியாளரும், தீவன ஊழல் பணத்தில் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டவருமான முகுல் கிஷோர் கபூர் கடந்த 17 ஆண்டுகளாக சிபிஐ கையில் சிக்காமல் தப்பித்து வருகிறார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஊழலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான லாலுவின் முன்னாள் உதவியாளர் 17 ஆண்டுகளாக சிபிஐ கையில் சிக்காமல் உள்ளார்.

6 ஆண்டுகள்
முகுல் கிஷோர் கபூர் கடந்த 1990ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை லாலுவின் உதவியாளராக இருந்தார். மாட்டுத் தீவன ஊழலில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

தலைமறைவு
தீவன ஊழல் விவகாரம் வெளியே வந்ததும் முகுல் தலைமறைவாகிவிட்டார். அவர் டேராடூனில் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் 17 ஆண்டுகளாக சிபிஐ கையில் சிக்காமல் உள்ளார்.

பெரும் பங்கு பணம்
தீவன ஊழல் குறித்து அனைவரையும் விட முகுலுக்கு தான் அதிக விவரம் தெரியும். அவர் தான் லாலுவின் வலக்கை, இடக்கையாக இருந்தவர். முகுல் தான் ஊழல் பணத்தில் பெரும்பங்கை வைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முகுல் கிடைத்தால்
முகுலை கைது செய்தால் தீவன ஊழல் குறித்து மேலும் பல தகவல் கிடைக்கும். 90களில் பீகாரில் லாலுவுக்கு அடுத்தபடியாக சக்திவாய்ந்தவராக இருந்தவர் முகுல் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லாலுவை காப்பாற்ற
முகுல் கைதானால் லாலுவுக்கு மேலும் சிக்கல் ஏற்படும் என்பதால் அவரை தலைமறைவாக இருக்க வற்புறுத்தியுள்ளனர் என்று பீகார் மாநில பாஜக தலைவர் நிதின் நவின் தெரிவித்தார்.

டேராடூன்
முகுல் டேராடூனில் ஆரோக்கியமாகவும், நல்லபடியாகவும் வாழ்வதாக அவருக்கு நெருக்கமானவர்களும், உறவினர்களும் தெரிவித்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு முகுல் 2 வீடுகள் வாங்க பாட்னா வந்ததாகக் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications