இந்த கூத்தை பாருங்க.. வேட்புமனுவில் லாலுவின் மூத்த மகனுக்கு வயது 25.. இளைய மகனுக்கு வயது 26
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுக்களில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், இளையமகன் தேஜஸ்வி பிரசாத்தைவிட ஒரு வயது குறைந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தலில் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், வைஷாலி மாவட்டத்தின் மகுவா சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். இளைய மகன் தேஜஸ் பிரசாத் யாதவ், வைஷாலி மாவட்டத்தில் ரஹோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
Lalu Yadav's elder son Tej Pratap Yadav shown 25 yrs of age and younger son Tejaswi Yadav shown aged 26 in affidavit. pic.twitter.com/SiOIBc1j7q
— ANI (@ANI_news) October 5, 2015 தேஜ்பிரதாப் யாதவ் நேற்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கடந்த அக்டோபர் 3-ந் தேதியன்று தேஜஸ்வி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வேட்பு மனுக்களில் மூத்த மகன் தேஜ்பிரதாப்புக்கு வயது 25; இளைய மகன் தேஜஸ்விக்கு வயது 26 என குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதேபோல் தேஜ்பிரதாப் யாதவை விட தேஜஸ்விதான் அதிக பணக்காரர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேஜஸ்வியின் அசையும் சொத்து மதிப்பு ரூ1,40,93,822.23 ; அசையா சொத்து மதிப்பு ரூ 88,72,500.
தேஜ்பிரதாப்பின் அசையும் சொத்து மதிப்பு ரூ 1,12,25,199.90; அசையா சொத்து மதிப்பு ரூ 91,52,500 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No error, whatever is the age in the voter id card is the age: Laloo Yadav on the discrepancy in age of his sons pic.twitter.com/pQHvFHaKIO
— ANI (@ANI_news) October 6, 2015 தேஜ்பிரதாப் இண்டர்மீடியட் படித்துள்ளதாகவும் இளையமகன் தேஜஸ்வினி 9-வது மட்டுமே படித்துள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், எங்கள் தவறு எதுவும் இல்லை... வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ளதைத்தான் நாங்கள் தெரிவித்திருக்கிறோம்.. அது அவர்கள் பிழையாக அச்சிட்டுவிட்டார்கள் என்றார்.
இதேபோல் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டையில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதைத்தான் இருவரும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர் என்றார்.
லாலுன்னாலே சர்ச்சைதானோ!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications