பிரதமர் மோடி பதவி பிரமாணத்தை தப்பாக வாசித்தார்.. மீண்டும் பிரமாணம் எடுக்க லாலு கோரிக்கை
பாட்னா: என் மகன் மட்டும் பதவி பிரமாணம் செய்யும்போது தப்பாக வாசிக்கவில்லை, பிரதமர் நரேந்திரமோடியே அப்படித்தான் வாசித்தார் என்று குற்றம்சாட்டியுள்ள ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மோடியையும், மீண்டும் பதவி பிரமாணம் எடுக்க குடியரசு தலைவர் ஆணையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 20ம் தேதி பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றது. லாலுவின் இளைய மகன் தேஜஸ் யாதவ் துணை முதல்வராகவும், மூத்த மகன், தேஜ் பிரதாப் யாதவ், அமைச்சராகவும் பதவியேற்றனர். ஆளுநர், ராம்நாத் கோவிந்த், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தேஜ் பிரதாப் பதவி பிரமாணம் எடுக்கும்போது, அபெக்ஷித் (வேண்டுகோள்) என்ற வார்த்தை பதிலாக உபக்ஷித் (புறக்கணிப்பு) என்று படித்தார். அப்போது ஆளுநர் குறுக்கிட்டு மீண்டும் பதவி பிரமாணத்தை சரியாக வாசிக்ககூறினார்.
இந்த சம்பவத்தால் லாலு மகன் திறமை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், லாலு தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில், நரேந்திரமோடி, கடந்த ஆண்டு நாட்டின் பிரதமராக பதவியேற்ற விழா வீடியோவை எடுத்துப்போட்டு, மோடியும் பிரமாணத்தின்போது தவறான உச்சரிப்பை வெளிப்படுத்தினார், என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்ஷுன் (நிலைநிறுத்துவேன்) என்ற ஹிந்தி வார்த்தைக்கு பதிலாக, மோடி அக்ஷான் என்று வாசித்ததாக லாலு குறிப்பிடுகிறார். மோடி கூறிய வார்த்தைக்கு பொருள் கிடையாதாம். இதைகுறிப்பிட்டுள்ள, லாலு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இதில் தலையிட்டு, மோடியை மீண்டும் பதவி பிரமாணம் செய்ய வைக்க வேண்டும் எனவும் தனக்கே உரித்தான பாணியில் குத்திக்காட்டியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications