உடல் நிலை சரியில்லாததால் கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்க முடியவில்லை - லாலு பிரசாத்
உடல்நிலை காரணமாக கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்க இயலாது என்று லாலுபிரசாத் யாதவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பாட்னா: உடல் நிலை சரியில்லாத காரணத்தால் திமுக தலைவர் கருணாநிதியின் 94 பிறந்தநாள் விழா மற்றும் சட்டசபை வைரவிழாவில் பங்கேற்க முடியவில்லை என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழா மற்றும் அவரது 94வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது.

பாஜக, அதிமுக தவிர மதசார்பற்ற கட்சிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுவை முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் போன்ற முக்கிய தலைவர்கள் உள்பட அகில இந்திய தலைவர்கள் பலருக்கும் அழைப்பு அனுப்பட்டுள்ளது.
கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைரவிழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி சென்னை வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Due to sudden ill health,not able to join Kalaignar M. Karunanidhi's 94th B'day celebrations tom. My best wishes & prayers for @kalaignar89
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) June 2, 2017
இதுகுறித்து லாலு பிரசாத் டுவிட்டர் பதிவில், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள லாலு, அவர் நீடுழி வாழ இறைவனை பிராத்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications