கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் நில மசோதா தாக்கல்: அமளியால் அவை ஒத்திவைப்பு
டெல்லி: மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த மசோதாவை வாபஸ் பெறுமாறு கூறி எதிர்கட்சியினர் கோஷமிட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடியது. இந்த கூட்டத் தொடர் இன்று முதல் மே மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை அவை கூடியதும் சோனியா காந்தியை தரக்குறைவாக பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸார் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியதும் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான நில மசோதாவை வாபஸ் பெறுமாறு அவர்கள் கோஷமிட்டுனர்.
இத்தனை அமளிக்கு நடுவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து இந்தியர்களை மீட்டது குறித்த அறிக்கையை வாசித்தார்.
அவர் பேசும் சப்தத்தை விட எதிர்கட்சியினரின் கோஷங்கள் தான் அதிகமாக கேட்டது. இருப்பினும் அவர் தனது அறிக்கையை தொடர்ந்து வாசித்தார். எதிர்கட்சியினரின் அமளியால் அவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications