வெள்ளம் காரணமாக அருணாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு... 16 தொழிலாளர்கள் பலி
தவாங்: அருணாச்சலப் பிரதேசம் தவாங் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அருணாசலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தவாங் நகரில் இருந்து நான்கு கிமீ தொலைவில் உள்ள இடத்தில் 16 தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இன்று அதிகாலை 3 மணியளவில் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அப்படியே மண்ணில் புதைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், தொழிலாளர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக தலைமையகம் கூடுதல் துணை ஆணையர் லோத் கம்போ கூறினார்.
இந்த விபத்தில் 9 தொழிலாளர்களும் மண்ணில் புதைந்து உயிரிழந்து விட்டதாகவும், மாயமான 7 பேரைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications