திருப்பதி 2வது மலைப்பாதையில் மண் சரிவு - போக்குவரத்து நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2 ஆவது மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை முதல் அந்த வழியாக செல்ல வாகனங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
மேலும் பாஷ்யகாரல சன்னதி அருகே பாறை உருண்டு விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாறையை அகற்றினால் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேவஸ்தான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் 2ஆவது பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அனைத்து வாகனங்களும் முதல் பாதையிலேயே அனுமதிக்கப்படுகின்றன. பாதசாரிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை முற்றிலும் நின்ற பிறகே மலைப்பாதையில் விழுந்துள்ள பாறைகள் அகற்றப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications