நாட்டின் மிகப் பெரிய, சிறிய நாடாளுமன்ற தொகுதிகள் எவை தெரியுமா?
டெல்லி: நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ஆந்திராவின் மல்காஜ்கிரி தொகுதி திகழ்கிறது. அதேபோல் மிகக் குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக இருக்கிறது லட்சத்தீவு தொகுதி.
லோக்சபா தேர்தல் தொடர்பான சில புள்ளி விவரங்கள் ஆச்சரியமூட்டக் கூடியவையாக இருக்கும். அந்த வகையில்தான் 5 மிகப் பெரிய லோக்சபா தொகுதிகள், 5 மிகச் சிறிய லோக்சபா தொகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பெரிய தொகுதிகள் எவை?
ஆந்திராவின் மல்காஜ்கிரி, உத்தரபிரதேசத்தின் காசியாபாத், கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு, உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ், டெல்லியின் வடமேற்கு டெல்லி ஆகிய தொகுதிகள்தான் நாட்டிலேயே மிகப் பெரிய தொகுதிகள்.

மிகச் சிறிய தொகுதிகள்..
நாட்டிலேயே மிகச் சிறிய தொகுதிகளாக லட்சத்தீவு, டாமன் டையூ, தாத்ரா நாகர் கைவேலி, லடாக் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் இருக்கின்றன.

மல்காஜ்கிரி
ஆந்திராவின் மல்காஜ்கிரி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 29,53,915

காசியாபாத்தில்..
உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 22,63,961

பெங்களூர் வடக்கு..
கர்நாடக மாநிலத்தின் வடக்கு தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 22,29,063 ஆகும்.

4வது இடத்தில் உன்னாவ்
மிகப் பெரிய தொகுதிகளில் 4வது இடத்தில் உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் தொகுதி இடம்பெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 21,10,388 வாக்காளர்கள் உள்ளனர்.

வடமேற்கு டெல்லி
தலைநகர் டெல்லியில் உள்ள வடமேற்கு டெல்லி 5வது மிகப் பெரிய லோக்சபா தொகுதியாகும். இங்கு 20,93,922 பேர் வாக்காளர்கள்.

லட்சத்தீவு
நாட்டிலேயே மிகக்குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதி அரபிக் கடலில் உள்ள லட்சத் தீவுகள் தொகுதிதான். இங்கு மொத்தம் 47,972 வாக்காளர்கள் உள்ளனர்.

டாமன் டையூ..
இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது அதே அரபிக் கடல் ஓரமாக இருக்கும் டாமன் டையூ தொகுதிதான்..இங்கு மொத்தம் 1,02,260 வாக்காளர்கள்

லடாக்
ஜம்மு காஷ்மீர்ன் லடாக் லோக்சபா தொகுதி குறைவான வாக்காளர்களைக் கொண்ட 3வது தொகுதியாக இருக்கிறது. இங்கு மொத்தம் 1,59,949 வாக்களர்கள் இருக்கின்றனர்..

தாத்ரா நாகர் ஹைவேலி..
யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹைவேலி தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,88,783

அந்தமான் நிக்கோபர் தீவுகள்..
மிகச் சிறிய தொகுதிகளில் 5வது இடத்தில் இருப்பது வங்கக் கடலில் உள்ள அந்தமான் நிக்கோபர் தீவுகள். இங்கு மொத்தம் 2,57,856 பேர் வாக்காளர்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications