பயங்கரவாதம் தவிர்த்த எஞ்சிய குற்றங்களுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்யலாம்: சட்ட ஆணையம் பரிந்துரை!!
டெல்லி: இந்தியாவில் பயங்கரவாதம் தவிர்த்த எஞ்சிய குற்றங்களுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்யலாம் என்று மத்திய அரசிடம் சட்ட ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது.
இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் நீண்டகால கோரிக்கை. இதையடுத்து இதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சட்ட ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

மாநில அரசுகள், சட்ட நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறையினரிடம் இது தொடர்பாக சட்ட ஆணையம் கருத்துக்கள் கேட்டது. அதன் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சட்ட ஆணையம் தயாரித்துள்ளது.
இந்த அறிக்கையை ஆணையத்தின் தலைவர் ஏ.பி.ஷா, சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் இன்று தாக்கல் செய்தார். இந்த ஆணையத்தின் பரிந்துரைகளில், பயங்கரவாதத்தைத் தவிர எஞ்சிய குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்குவதை ரத்து செய்யலாம்; இந்தியாவில் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு இதுவே சரியான தருணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய ஆணையத்தின் 3 உறுப்பினர்கள் எதிர்த்ததாகவும் தூக்கு தண்டனையை ரத்து செய்வது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எனவும் அவர்கள் வாதிட்டதாகவும் கூறப்படுகிறது. சட்ட ஆணையத்தின் இப்பரிந்துரையானது இந்திய அளவில் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications