நீதிபதிகளுக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் ஊழல் ஒழிப்புப் பேரணி
மதுரை: கட்டாய ஹெல்மெட் சட்டத்தை எதிர்த்து கடந்த 40 நாட்கள் தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்கள் தற்போது அந்த போராட்டத்தை நீதித்துறையில் உள்ள ஊழலுக்கு எதிரானதாக மாற்றியுள்ளனர். "நீதிபதிகள் நாடாளும் மன்னனும் அல்ல! வழக்கறிஞர் அடங்கிப் போகும் அடிமைகளும் அல்ல" என்ற போஸ்டர்கள் மதுரையின் முக்கிய இடங்களை ஆக்கிரமித்துள்ளன.
கடந்த 2ம் தேதி நீதிபதிகளுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்திய வழக்கறிஞர்கள். "நீதித்துறை ஊழலே அனைத்து ஊழலின் பாதுகாவலன்" என்ற பெயரில் மதுரையில் இன்று நீதித்துறை ஊழல் ஒழிப்புப் பேரணியும் அதன் தொடர்ச்சியாக ஆர்பாட்டத்தையும் இன்று நடத்தினர்.

இன்று நடைபெற்ற பேரணியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பங்கேற்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கிய பேரணி கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அடைந்தது.
அங்கு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய வழக்கறிஞர்கள், ஊழல் நீதிபதிகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். கடந்த 65 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நீதிபதிகள் லஞ்சம், ஊழல், பாலியல், அதிகார மீறல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் மிகவும் கேவலமாக நடந்து, குற்றம் நிரூபணமாகிய கீழமை நீதிமன்ற நீதிபதிகள் சிலர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நிலை என்ன? என்றாவது ஒரு நீதிபதி மீது லஞ்சம்-ஊழல் குற்றத்திற்கு வழக்கு, விசாரணை நடந்ததுண்டா? இல்லை நீதிபதிகள் அனைவரும் யோக்கியர்களா? என்றும் கேள்வி எழுப்பினர்.

ஹெல்மெட் பிரச்சினையில் தொடங்கிய வழக்கறிஞர்களின் போராட்டம் இப்போது நீதித்துறையில் ஊழலுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications