கன்யாகுமாருக்கு எதிராக டெல்லியில் வக்கீல்கள் பேரணி.. வந்தே மாதரம் முழக்கம்
டெல்லி: ஜே.என்.யூ கன்யாகுமார் ஆதரவு போராட்டங்களுக்கு எதிராக வக்கீல்கள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தினர். பாட்டியாலா கோர்ட் முதல் இந்தியா கேட் வரை அவர்கள் பேரணி நடத்தி தங்கள் பலத்தை காண்பித்தனர்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு, அப்சல் குரு ஆதரவு கோஷங்களை மாணவர்கள் சிலர் எழுப்பியதாக வந்த குற்றச்சாட்டின்பேரில், தேசத்துரோக வழக்கின்கீழ், மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
Delhi: Lawyers protest march from Patiala House court to India Gate. pic.twitter.com/brcHtCDp9Q
— ANI (@ANI_news) February 19, 2016
டெல்லி பாட்டியாலா பகுதியிலுள்ள கோர்ட்டில் கன்யா குமாரை ஆஜர்படுத்தியபோது, அவரை சூழ்ந்து வக்கீல்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். பத்திரிகையாளர்களுக்கும் அடி விழுந்தது. கோர்ட்டுக்குள் வந்தே மாதரம் என கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், பாட்டியாலா கோர்ட் முதல் டெல்லி கேட் வரையில், இன்று மதியம், வக்கீல்கள் பிரமாண்ட பேரணி நடத்தி தங்கள் பலத்தை காண்பித்தனர். கன்யாகுமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறும் நிலையில், அதற்கு பதிலடியாக வக்கீல்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
பேரணி வழிநெடுக, வந்தே மாதரம், பாகிஸ்தான் ஒழிக என்பது போன்ற கோஷங்களை வக்கீல்கள் எழுப்பியபடி சென்றனர். கைகளில் தேசிய கொடியை ஏந்தியிருந்தனர். கன்யா குமார் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications