பிரதமரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்: கெஜ்ரிவாலுக்கு ஷிண்டே அறிவுரை
டெல்லி: ‘கூட்டணி அரசை எப்படி கொண்டு செல்வது என பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்' என டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அறிவுரை கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. டெல்லியின் முதல்வராக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சனிக்கிழமையன்று பதவியேற்றார்.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது என்பது மிகவும் கடினமான பணி என்று மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, ‘காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றுள்ளார். அரசு செயல்படவேண்டும் என்ற எங்களுடயை கொள்கை தெளிவாக உள்ளது. தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கவனமாக பேச வேண்டும். மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டணி அரசை எவ்வாறு கொண்டு செல்லவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கியிடம் இருந்து படித்துக் கொள்ளவேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications