48 மணி நேரம் கெடு.. பாகிஸ்தானைச் சேர்ந்தவங்க எல்லாம் ஊரைவிட்டு போங்க.. ராஜஸ்தானில் அதிரடி உத்தரவு
பிகேனர்:ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அம்மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம், பிகேனர் மாவட்ட நிர்வாகம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு விவரங்கள் வருமாறு:

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும். ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் தங்குவதற்கு பாகிஸ்தான் குடிமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்திய குடிமக்கள் பாகிஸ்தான் மக்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வணிகத்தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது. பிகேனர் மாவட்டத்தை சேர்ந்த யாரும் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தக்கூடாது.
யாரும் பாகிஸ்தானுடன் எந்த தகவல் பரிமாற்றமும் செய்யக்கூடாது. இந்த உத்தரவு இன்னும் 2 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று பிகேனர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
