பெங்களூர் பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை....படம்பிடிக்க போன போட்டோகிராபர்கள் மீது பாய்ந்து தாக்கியது!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூர் விப்ஜியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை 14 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது. சிறுத்தையை படம் பிடிக்க போன பத்திரிகை போட்டோகிராபர்கள், வனத்துறை அதிகாரிகள் என பலரையும் சிறுத்தை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் விப்ஜியார் பள்ளியில் ஒரு சிறுத்தை நடமாடுவதை வாட்ச்மேன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.

கேமராவில் சிறுத்தை
அவர்கள் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அப்போது அதிகாலை நேரத்தில் ஒரு சிறுத்தை பள்ளிக்குள் புகுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

வெளியே வந்த சிறுத்தை
இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்து பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். பட்டாசுகளை வெடித்து வெளியேற்ற முயற்சித்த போது அறையைவிட்டு வெளியே வந்தது சிறுத்தை.

பாய்ந்து தாக்கியது
ஆக்ரோஷத்துடன் வெளியே ஓடிவந்த சிறுத்தை அங்கு இருந்த போலீசார், வனத்துறையினரை நோக்கி பாய்ந்தது. முதலில் வன அலுவலர் முதுகில் பாய்ந்து தாக்கியது சிறுத்தை. அவர் சிறுத்தையின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.

சிக்கிய போட்டோகிராபர்
அப்போது பள்ளிகூட கேட்டின் மீது ஏறி பத்திரிகை போட்டோகிராபர் ஒருவர் தப்பிக்க முயன்றார். சிறுத்தையும் கேட் மீது தாவி பாய்ந்து அந்த போட்டோகிராபரை தாக்கி கீழே இழுத்துப் போட்டது.

கேமராவுடன் மல்லுகட்டிய போட்டோகிராபர்
அதேபோல் மற்றொரு போட்டோகிராபரையும் சிறுத்தை தாக்கியது. அவர் கையில் கேமராவுடன் துணிச்சலுடன் சிறுத்தையுடன் மல்லுக்கட்ட அது அவரை விட்டு விட்டு ஓடியது. இப்படியாக போக்கு காட்டிய சிறுத்தையை கடைசியில் மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.

14 மணிநேர போராட்டம்
14 மணிநேர பெரும் போராட்டத்துக்குப் பின்னர் சிறுத்தை சிக்கியதால் மாணவர்களும் பெற்றோரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிடப்பட்டது.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications