"பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை செருகி.." லெஸ்பியன் காதலர்களுக்கு நேர்ந்த கொடூரம்! ஷாக் சம்பவம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தன்பால் காதல் உறவில் இருந்த இரு பெண்களை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று மிக மோசமாகத் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நமது நாட்டில் தன்பால் ஈர்பாளர்கள் தொடர்ந்து சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர். அவர்களைக் குறி வைத்து அவ்வப்போது கொடூரமான தாக்குதல்களும் நடந்து வருகிறது.
தன்பால் காதல் என்பது தண்டைக்குரிய குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றே சொல்லிவிட்ட போதிலும், இன்னும் கூட அவர்களை சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேற்கு வங்கம்
அப்படித்தான் மேற்கு வங்கத்தில் தன்பால் ஈர்பாளர்களை குறிவைத்து கொடூர தாக்குதல் நடந்துள்ளது. மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தன்பால் உறவில் இருந்த இரு பெண்கள் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மோசமாகத் தாக்கிய அடையாளம் தெரியாத மர்ம கும்பல், அவர்களின் அந்தரங்க உறுப்புகளில் இரும்பு கம்பிகள் செருகிக் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

அத்துமீறல்
மேற்கு வங்கத்தில் அவுதுவா கிராமத்தில் கடந்த அக்டோபர் 25இல் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு இரு பெண்கள் தனியாக வசித்து வந்த வீட்டிற்குள் இந்த கும்பல் அத்துமீறி நுழைந்துள்ளது. அந்த பெண்களின் உறவினர் உட்பட மூன்று ஆண்கள் அங்கே சென்றுள்ளனர். நள்ளிரவில் அத்துமீறிப் புகுந்த அந்த கும்பல், இரு பெண்கள் எப்படி ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

கொடூர தாக்குதல்
அந்த பெண்களை மிகவும் ஆபாசமாகத் திட்டிய அந்த கும்பல், லெஸ்பியன்களாக இருப்பது பாவம் எனக் கூறி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அந்த பெண்களின் பிறப்பு உறுப்புகளில் சூடான கம்பிகளை நுழைந்து தாக்கியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வெளியே சொன்னால், அந்த பெண்களின் தன்பால் உறவைக் கிராமத்தில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிடுவோம் என மிரட்டி உள்ளனர்.

பலாத்கார முயற்சி
அந்த மூன்று ஆண்களும் அவர்களை மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்ற நிலையில், அந்த பெண்களை அவர்களிடம் இருந்து தப்பி அருகே இருந்த வயல் பகுதிக்குள் ஓடித் தப்பியுள்ளனர். இது நடந்து மூன்று நாட்களுக்கு பின்னரே அவர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர். மூன்று குற்றவாளிகளில் ஒருவரான சாஹேபுல் ஷேக் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள இரு குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கிராமத்தினருக்கு தெரியும்
அந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான நபர்களுக்கு இந்த இரு பெண்களின் தன்பால் காதல் குறித்துத் தெரியுமாம். இருப்பினும், அவர்களை இதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், இந்த மூன்று ஆண்கள் இந்த விஷயத்தை வைத்து அவர்களைப் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "நாங்கள் உறவில் இருப்பது அனைவருக்கும் தெரியும். யாரும் எதுவும் சொல்லவில்லை..

தொடை பகுதிகளில்
அப்படி அவர்கள் கூடாது எனச் சொல்லியிருந்தால்.. எங்கள் உறவைத் தொடராமலேயே போயிருப்போம். ஆனால், இந்த மூன்று பேரும் அத்துமீறி வீட்டில் நுழைந்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். எங்கள் அந்தரங்க பகுதிகளில் தொட்டனர்.. பலாத்காரம் செய்யவும் முயன்றனர். வயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் எங்களை மிக மிகக் கொடூரமாகத் தாக்கினர்" என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

போலீசார்
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "கிராமப்புறங்களில் தன்பால் ஈர்ப்பு இன்னுமே கூட ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.. தன்பால் உறவில் இருக்கும் பெண்களைக் குறி வைத்து இதுபோன்ற நபர்கள் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். அவர்களைப் பலாத்காரம் செய்ய முயல்கின்றனர். பலாத்காரம் செய்யவே இதுபோல தன்பால் உறவில் இருக்கும் பெண்களைக் குறி வைக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications