பிரதமர்தான் அமைச்சர்களை தேர்வு செய்ய வேண்டும்... தேசிய ஜனநாயகக் கூட்டணி
டெல்லி: யார் யார் அமைச்சராக வேண்டும். யாருக்கு என்ன துறை தர வேண்டும் என்பதை பிரதமர்தான் முடிவு செய்வார் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவரும், அகாலிதள தலைவருமான நரேஷ் குஜ்ரால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்து பாஜக தலைவர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமையும்போது அவர்தான் பிரதமர் என்ற வகையில் அமைச்சர்களை முடிவு செய்ய முடியும். யாருக்கு என்ன துறை தர வேண்டும் என்று அவர்தான் முடிவு செய்ய முடியும்.
மாறாக இதற்காக ஒரு குழுவை அமைத்தால் அது குழப்பத்தில்தான் முடியும். நல்லாட்சி தருவதற்கான சூழலை அது உருவாக்காது.
மேலும் இப்படிப்பட்ட குழுக்கள் ஒரு பக்கவாட்டு அதிகார மையமாக மாறும் அபாயமும் உள்ளது. கடந்த கால அனுபவத்தை வைத்து இதைச் சொல்கிறேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த தவறுகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி செய்து விடக் கூடாது. அதைப் பார்த்து நாம் சரியாக செயல்பட முயிற்சிக்க வேண்டும். பக்கவாட்டு அதிகார மையங்களால்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி குழப்பமான ஆட்சியைத் தந்ததற்குக் காரணம் என்பதையும் மறந்து விடக் கூடாது.
ஆளும் கூட்டணியில் இடம் பெறும் அனைத்துக் கட்சிகளின் அபிலாஷைகளையும் சீர் தூக்கிப் பார்த்து சிறந்த முடிவுகளை மோடி அரசு எடுக்க வேண்டும்.
மோடி அரசில் நான் எந்தத் துறையை வகிப்பேன் இப்போதே ஊகிக்க நான் விரும்பவில்லை. மேலும் நான் அமைச்சர் பதவிக்காக அலையவும் இல்லை. அது பிரதமரின் உரிமையாகும். அதில் யாரும் நெருக்கடி தர முடியாது, கூடவும் கூடாது.
மிகவும் பலவீனமான பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கைப் பார்த்து மோடி நிறைய கற்றுக் கொள்ளலாம். ஒரு பிரதமர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு சிங்தான் சிறந்த உதாரணம். அவரது செயல்பாடுகள், நாட்டின் பொருளாதாரம் முதல் பல துறைகளையும் பாதித்து விட்டது.
எனவே மோடி, முற்றிலும் திறமையான, தகுதியானவர்களையே அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதில் சமரசத்திற்கும், சிபாரிசுக்கும் இடமே இருக்கக் கூடாது.
மேலும் தொழிலதிபர்கள், தொழில்நுட்பத்துறையினர் போன்றோர் அமைச்சர்களாகக் கூடாது. அது சரியாக இருக்காது. மாறாக அவர்களை ஆலோசகர்களாக மாற்றலாம்.
அரசு அமைந்ததும் முதல் முக்கியப் பணியாக பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். அதுதொடர்பான வெள்ளை அறிக்கையை 30 முதல் 40 நாட்களுக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications