டெல்லியில் வருகிறது "ஆம்ஆத்மி கேன்டீன்"... அம்மா உணவகம் போன்று தொடங்க கெஜ்ரிவால் திட்டம்...
டெல்லி : தமிழகத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற 'அம்மா உணவகம்' போன்று டெல்லியிலும் மலிவான விலையில் உணவு வழங்கும் ஆம் ஆத்மி உணவகங்களை 2 மாதங்களில் தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி பல சர்ச்சைகளையும் சறுக்கலையும் சந்தித்து வந்தாலும் பல்வேறு நலத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது டெல்லி மக்களுக்கு மலிவான விலைக்கு உணவு வழங்கும் ஆம் ஆத்மி கேன்டீன் தொடங்க திட்டமிட்டு வருவதாக, ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கேன்டீனில் சத்து மிக்க மீல்ஸ் ஐந்திலிருந்து பத்து ரூபாய்க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டடத் தொழிலாளர்கள், குடிசைவாசிகள், மாணவர்கள், மற்றும் அலுவலகம் செல்வோருக்காக இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த மலிவு விலை கேன்டீன், முதற்கட்டமாக தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ள இடங்களில் அமைக்கப்பட உள்ளது.
ஆம் ஆத்மி அரசு, அம்மா உணவகத்தைப் பின்பற்றி இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அம்மா உணவகத்தில், தரமான உணவை, மலிவான விலைக்கு காலை,மதியம்,இரவு என மூன்று வேளையும் உணவு விற்கப்படுவது போல் டெல்லி அரசின் ஆம் ஆத்மி கேன்டீனிலும் உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் ஷீலா தீட்சித் கொண்டு வந்த "ஜன் ஆஹார்" என்ற திட்டம் தோல்வியைடைந்த நிலையில், இத்திட்டத்திற்கு மாற்றாக தற்போது ஆம் ஆத்மி கேன்டீன் திட்டம் கொண்டுவரப்படுகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications