கங்கனா ரணாவத் உட்பட.. லோக்சபா தேர்தலில் வென்ற சினிமா பிரபலங்கள் லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

18வது லோக்சபாவில் பல சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் நடிகர் நடிகைகள் எம்.பி.க்களாக காலடி எடுத்து வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான கங்கனா ரனாவத் முதல் ஹேம மாலினி வரை பல பிரபலங்கள் இந்த லிஸ்ட்டில் உண்டு.

lok sabha election 2024 kangana ranaut 2024

இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் கங்கனா வெற்றி பெற்றார். ஆறு முறை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளவரின் மகனையே தோற்கடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். "ராமாயணம்" என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக அறியப்பட்ட அருண் கோவில், உத்தரபிரதேசத்தின் மீரட் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரபல நடிகையும், கிருஷ்ண பக்தருமான ஹேம மாலினி, மதுராவிலிருந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.

முன்னாள் போஜ்புரி சினிமா நட்சத்திரமும் பாடகருமான மனோஜ் திவாரி வடகிழக்கு டெல்லி தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். மற்றொரு போஜ்புரி சினிமா நட்சத்திரமான ரவி கிஷன், கோரக்பூரில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி, மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் சத்ருகன் சின்ஹா, ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆனால், நடிகையும் பாஜக எம்பியுமான ஸ்மிருதி இரானி அமேதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். நிராஹுவா என அழைக்கப்படும் நடிகர் தினேஷ் லால் யாதவ் அசம்கரில் தோல்வியடைந்தார்.

மேற்கு வங்கத்தில் பிர்பூம், ஹூக்ளி மற்றும் கட்டால் தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஜூன் மாலியா, ரச்சனா பானர்ஜி மற்றும் தேவ் ஆதிகாரி ஆகியோர் இந்த தொகுதிகளில் வென்ற நட்சத்திரங்கள் ஆகும். திரைப்பட பிரமுகர்களுக்கும் இந்திய அரசியலுக்கும் இடையிலான தொடர்பு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, பல நடிகர்கள் வெற்றிகரமாக அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர். தமிழகத்திலும் எம்ஜிர் முதல் விஜய் வரை பலரை அரசியல், அரசியல்வாதியாக மாற்றிவிட்டது. தென் இந்தியா மட்டுமல்ல நாடு முழுக்கவே ஸ்டார்கள் வெற்றி பெற்றுள்ளது எதை உணர்த்துகிறது. நீங்களே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+