ஏர் இந்தியா விமானத்தில் பல்லி பன்... அதிர்ச்சியடைந்த பயணி
டெல்லி: பட்டர் பன்... கிரீம் பன் சாப்பிட்டிருப்போம். ஆனால் பல்லி பன் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஏர்இந்தியா விமானத்தில்தான் பயணி ஒருவருக்கு பல்லி பன் கொடுத்துள்ளனர் விமான பணிப்பெண்கள். டெல்லியில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவில்தான் பல்லி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியாவிற்கு சொந்தமான ஏ.ஐ. 111 என்ற விமானம், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் (ஐ.ஜி.ஐ) இருந்து வியாழக்கிழமையன்று மதியம் 1மணிக்கு லண்டன் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணித்தவர்களுக்கு ஏர் இந்தியா சார்பில் உணவு வழங்கப்பட்டது. அதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த பயணி, இது குறித்து விமான பணிப்பெண்களிடம் புகார் கூறினார். இதையடுத்து விமானப்பணிப் பெண்கள் அவருக்கு மாற்று உணவை வரவழைத்து கொடுத்தனர். எனினும் அந்த பயணி அந்த உணவை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
Lizard found in Air India in-flight meal
http://t.co/Bdm5b8yotM via@timesofindia
— Divya Saxena Rastogi (@Divsbabs) June 13, 2015 லண்டன் சென்றடைந்ததும் இது குறித்து ஏர்இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு அந்த பயணி எழுத்து முலமாக புகார் அளித்தார். ஆனால் அவரது புகார் மனுவுக்கு ஏர்இந்தியா தரப்பில் எந்த பதிலும் இல்லையாம்...! இந்த பல்லி பன் சமூக வலைத்தளங்களில் தற்போது சுற்றி வருகிறது. ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.
இதனிடையே உணவில் பல்லி இருந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறியுள்ளார்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications