லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. 95 தொகுதிகளில் நடந்த பலப்பரீட்சை!

லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 95 தொகுதிகளில் நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 95 தொகுதிகளில் இன்று நடைபெற்றது.

    லோக்சபா தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் மொத்தம் 91 தொகுதிகளில் நடந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது. மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.

    அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடந்தது.

    எங்கு முக்கியம்

    எங்கு முக்கியம்

    மிக முக்கியமான மாநிலங்களான உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 3 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அதேபோல் கர்நாடகாவில் மொத்தம் 14 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடந்தது. பெங்களூரில் உள்ள நான்கு முக்கிய தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது.

    தமிழக தேர்தல்

    தமிழக தேர்தல்

    இந்த லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் இரண்டாம் கட்டமாக நடந்தது. இதில் அதிக இடங்களில் தேர்தல் நடக்கும் மாநிலம் தமிழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்ததால் அதிக முக்கியத்துவம் பெற்றது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடந்தது.

    இடைத்தேர்தல் நடந்தது

    இடைத்தேர்தல் நடந்தது

    லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்தது. நேற்று வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் 38 தொகுதியில் மட்டுமே தமிழகத்தில் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23 செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிகுந்த ஆர்வம்

    மிகுந்த ஆர்வம்

    இந்த லோக்சபா தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. மக்கள் இந்த தேர்தலில் மிகுந்த ஆர்வமாக வாக்களித்தனர். இந்த தேர்தல் காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    சதவிகிதம் எவ்வளவு

    சதவிகிதம் எவ்வளவு

    ஜம்மு காஷ்மீரில் 47.3%
    மணிப்பூரில் 76.6%
    உத்தர பிரதேசத்தில் 60.01%
    அசாமில் 76.32%
    தமிழகத்தில் 63.73%
    பீகாரில் 58.17%
    சட்டீஸ்கரில் 68.70%
    கர்நாடகாவில் 61.80%
    மஹாராஷ்டிராவில் 57.30%
    ஒடிசாவில் 72.04%
    மேற்கு வங்கத்தில் 75.27% வாக்குகள் பதிவாகி உள்ளது. மொத்தமாக இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தல் வாக்குபதிவில் தற்போது வரை
    68.80% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+