Lok Sabha Election 2019: இன்று 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு- வீடியோ
லோக்சபா தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 71 தொகுதிகளில் இன்று நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கியது.
நாடு முழுக்க மூன்று கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 303 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 240 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் இன்று நான்காம் கட்டமாக 9 மாநிலங்களில் 71 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.
Apr 29, 2019, 6:33 pm IST
உத்தர பிரதேசம்:
உத்தர பிரதேசத்தில் 6 மணி வரை 53.12% வாக்குகள் பதிவாகி உள்ளது
Apr 29, 2019, 6:32 pm IST
மகாராஷ்டிரா:
மகாராஷ்டிராவில் 6 மணி வரை 51.06% வாக்குகள் பதிவாகி உள்ளது
Apr 29, 2019, 6:32 pm IST
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் 6 மணி வரை 76.47% வாக்குகள் பதிவாகி உள்ளது
Apr 29, 2019, 6:32 pm IST
பீகார்:
பீகாரில் 6 மணி வரை 53.67% வாக்குகள் பதிவாகி உள்ளது
Apr 29, 2019, 6:32 pm IST
ஜார்கண்ட்:
ஜார்கண்டில் 6 மணி வரை 63.40% வாக்குகள் பதிவாகி உள்ளது
Apr 29, 2019, 6:32 pm IST
காஷ்மீர்:
காஷ்மீரில் 6 மணி வரை 9.8% வாக்குகள் பதிவாகி உள்ளது
Apr 29, 2019, 6:32 pm IST
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசத்தில் 6 மணி வரை 65.86% வாக்குகள் பதிவாகி உள்ளது
Apr 29, 2019, 6:32 pm IST
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் 6 மணி வரை 62.86% வாக்குகள் பதிவாகி உள்ளது
Apr 29, 2019, 6:31 pm IST
ஒடிசா:
ஒடிசாவில் 6 மணி வரை 64.05% வாக்குகள் பதிவாகி உள்ளது
Apr 29, 2019, 6:08 pm IST
லோக்சபா தேர்தல்
லோக்சபா தேர்தல் மொத்தம் 71 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்தது. தற்போது டோக்கன் வாங்கிய வாக்காளர்கள் மட்டும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்
Apr 29, 2019, 6:07 pm IST
லோக்சபா தேர்தல்:
வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மொத்தம் 9 மாநிலங்களில் நாடு முழுக்க தேர்தல் நடைபெற்றது
Apr 29, 2019, 6:02 pm IST
ராஜஸ்தான்:
ஜோத்பூர் வாக்குச்சாவடியில் நிறைய கள்ள ஓட்டு பதிவானதாக புகார். வாக்காளர்களின் தொடர் புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவு
Apr 29, 2019, 5:55 pm IST
ஒடிசா:
ஒடிசாவில் 5 மணி வரை 53.8% வாக்குகள் பதிவாகி உள்ளது.
Apr 29, 2019, 5:55 pm IST
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் 5 மணி வரை 57.42% வாக்குகள் பதிவாகி உள்ளது. 13 இடங்களில் தேர்தல் நடக்கிறது
Apr 29, 2019, 5:55 pm IST
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசத்தில் 5 மணி வரை 58.89% வாக்குகள் பதிவாகி உள்ளது. அங்கு 6 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது
Apr 29, 2019, 5:54 pm IST
காஷ்மீர்:
காஷ்மீரில் 5 மணி வரை 9.8% வாக்குகள் பதிவாகி உள்ளது. காஷ்மீரில் 1 தொகுதியில் தேர்தல் நடக்கிறது.
Apr 29, 2019, 5:54 pm IST
ஜார்கண்ட்:
ஜார்கண்டில் 5 மணி வரை 59.43% வாக்குகள் பதிவாகி உள்ளது. ஜார்கண்டில் 3 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது
Apr 29, 2019, 5:54 pm IST
பீகார்:
பீகாரில் 5 மணி வரை 50.42% வாக்குகள் பதிவாகி உள்ளது. இன்று பீகாரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது
Apr 29, 2019, 5:54 pm IST
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் 5 மணி வரை 66.9% வாக்குகள் பதிவாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளில் தேர்தல் இன்று நடக்கிறது. அங்கு ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது
Apr 29, 2019, 5:54 pm IST
மகாராஷ்டிரா:
மகாராஷ்டிராவில் 5 மணி வரை 42.5% வாக்குகள் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 17 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது
Apr 29, 2019, 5:54 pm IST
உத்தர பிரதேசம்:
உத்தர பிரதேசத்தில் 5 மணி வரை 45.8% வாக்குகள் பதிவாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் 3 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது
Apr 29, 2019, 5:37 pm IST
லோக்சபா தேர்தல்:
லோக்சபா தேர்தலில் மாலை 5 மணி வரை 50.6% வாக்குகள் பதிவாகி உள்ளது. 9 மாநிலங்களில் 71 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது
Apr 29, 2019, 5:33 pm IST
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் பாஜக அமைச்சர் பாபுல் சுப்ரியாவிற்கு எதிராக தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு. வாக்குசாவடிக்குள் முறைகேடாக புகுந்ததால் வழக்கு பதிவு
Apr 29, 2019, 5:32 pm IST
மகாராஷ்டிரா:
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பை காந்தி நகர் தொகுதியில் வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து உத்தவ் தாக்கரே வாக்களித்தார்
Apr 29, 2019, 5:20 pm IST
மகாராஷ்டிரா:
மும்பையில் உள்ள ஜூஹூ தொகுதியில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வாக்களித்தார். பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தில் விவேக் ஓபராய் மோடியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
Apr 29, 2019, 5:12 pm IST
மேற்கு வங்கம்:
கொல்கத்தாவில் இரண்டு பாஜக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் எப்ஐஆர் பதிவு. வாக்குச்சாவடியில் அத்து மீறியதாக கூறி வழக்கு பதிவு
Apr 29, 2019, 5:07 pm IST
காஷ்மீர்:
காஷ்மீரில் 4.30 மணி வரை 9.2% வாக்குகள் பதிவாகி உள்ளது. காஷ்மீரில் 1 தொகுதியில் தேர்தல் நடக்கிறது. அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடக்கிறது
Apr 29, 2019, 5:04 pm IST
ஒடிசா:
ஒடிசாவில் 4.30 மணி வரை 52.9% வாக்குகள் பதிவாகி உள்ளது. இதில் ஒடிசா சட்டசபை தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்கிறது
Apr 29, 2019, 5:04 pm IST
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் 4.30 மணி வரை 56.62% வாக்குகள் பதிவாகி உள்ளது. 13 இடங்களில் தேர்தல் நடக்கிறது
Apr 29, 2019, 5:03 pm IST
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசத்தில் 4.30 மணி வரை 57.79% வாக்குகள் பதிவாகி உள்ளது. அங்கு 6 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது
READ MORE
4:56 AM, 29 Apr
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் 13 இடங்களில் தேர்தல் நடக்கிறது.
4:56 AM, 29 Apr
மஹாராஷ்டிரா
மஹாராஷ்டிராவில் 17 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
4:57 AM, 29 Apr
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு முக்கிய வேட்பாளர்கள் இன்று தேர்தலை சந்திக்கிறார்கள்.
4:57 AM, 29 Apr
ஜார்கண்ட்
ஜார்கண்டில் 3 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
4:57 AM, 29 Apr
காஷ்மீர்
காஷ்மீரில் 1 தொகுதியில் தேர்தல் நடக்கிறது. அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடக்கிறது
4:57 AM, 29 Apr
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் மூன்றாவது கட்டமாக 8 தொகுதிகளில் தேர்தல் இன்று நடக்கிறது. அங்கு ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
4:57 AM, 29 Apr
உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசத்தில் 3 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு நான்காவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.
4:57 AM, 29 Apr
பீகார்
பீகாரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
4:58 AM, 29 Apr
ஒடிசா
ஒடிசாவில் 6 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் ஒடிசா சட்டசபை தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்க உள்ளது.
7:06 AM, 29 Apr
லோக்சபா தேர்தல் 2019
லோக்சபா 4வது கட்ட வாக்குப் பதிவு துவங்கியது. 71 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு
8:06 AM, 29 Apr
மகாராஷ்டிரா:
4வது கட்ட லோக்சபா தேர்தலையொட்டி மும்பையில் இன்று வாக்களித்தார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த்த தாஸ்
அசன்சோல் பகுதியில் பாஜக வேட்பாளர் பாபுல் சுப்ரியோ கார் தாக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக புகார்
West Bengal: BJP MP candidate from Asansol, Babul Supriyo's car vandalised in Asansol. A TMC polling agent says, there is no BJP polling agent here. pic.twitter.com/kBNmpXCvPD
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் 11 மணி நிலவரப்படி 34.71% வாக்குகள் பதிவாகி உள்ளது. ஒடிசாவில் 17% வாக்குகள் பதிவாகி உள்ளது.
12:18 PM, 29 Apr
லோக்சபா தேர்தல்
லோக்சபா தேர்தல்: மகாராஷ்டிராவில் 12 மணி நிலவரப்படி 19.61% வாக்குகள் பதிவு
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் 12 மணி நிலவரப்படி 19.61% வாக்குகள் பதிவாகி உள்ளது
2:53 PM, 29 Apr
குடும்பத்தோடு ஓட்டு போட்டார் சச்சின்
மகாராஷ்டிரா: லோக்சபா தேர்தலையொட்டி, மும்பை பாத்ரா பகுதியில் மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜுன் ஆகியோருடன் வாக்களித்தார் சச்சின் டெண்டுல்கர். சாரா மற்றும் அர்ஜுன் வாக்களிக்கும் முதல் தேர்தல் இது
Mumbai: Sachin Tendulkar, his wife Anjali Tendulkar, daughter Sara Tendulkar, and son Arjun Tendulkar after casting their vote at polling center number 203 in Bandra. Sara Tendulkar and Arjun Tendulkar are first time voters. #LokSabhaElections2019pic.twitter.com/0dNVhNR8mg
டெல்லி: 4வது கட்ட லோக்சபா தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 49.53% வாக்குப்பதிவாகியுள்ளது.
4:09 PM, 29 Apr
மகாராஷ்டிரா:
மும்பையில் உள்ள வால்சிங்ஹாம் பள்ளியில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வாக்களித்தார். மகாராஷ்டிராவில் மொத்தம் 17 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது
Union Min&BJP leader Piyush Goyal after casting his vote at Walsingham School, Malabar Hill in Mumbai: This election is now a Tsunami election. North South,East&West, Modi wave has overtaken the country. PM Modi is the tallest leader today in the country. #LokSabhaElections2019pic.twitter.com/S6fXnrhLE1
மேற்கு வங்கத்தில் அசன்சோல் பகுதியில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல். பாஜக அமைச்சர் பாபுல் சுப்ரியாவின் கார் அடித்து நொறுக்கப்பட்டது
4:18 PM, 29 Apr
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் 3 மணி வரை 65.92% வாக்குகள் பதிவாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளில் தேர்தல் இன்று நடக்கிறது. அங்கு ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது
4:27 PM, 29 Apr
உத்தர பிரதேசம்:
2 வாக்குப்பதிவு மையங்களில் சமாஜ்வாதிக்கு வாக்களித்தால் பாஜகவிற்கு வாக்கு செல்வதால் பரபரப்பு. சமாஜ்வாதி சார்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு. உத்தரபிரதேசத்தில் 3 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது
4:30 PM, 29 Apr
உத்தர பிரதேசம்:
உத்தர பிரதேசத்தில் மதியம் 3.30 மணி வரை 44.16% வாக்குகள் பதிவு. உத்தரபிரதேசத்தில் 3 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது
4:37 PM, 29 Apr
மத்திய பிரதேசம்:
போபாலில் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய 3 தேர்தல் பணியாளர்கள் பலி. அதிக பணிச்சுமையால் 3 பணியாளர்களும் பலியானதாக தகவல்
4:46 PM, 29 Apr
மேற்கு வங்கம்:
மக்களை வாக்களிக்க விடாமல் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தடுப்பதாக அம்மாநில முதல்வர் மமதா குற்றச்சாட்டு. பொதுமா வாக்குச்சாவடியில் ரிசர்வ் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மமதா கண்டனம்
4:49 PM, 29 Apr
மகாராஷ்டிரா:
மும்பையில் உள்ள பாந்த்ரா தொகுதியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் வாக்களித்தார். மகாராஷ்டிராவில் மொத்தம் 17 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது