பாஜக வேட்பாளராகும் முகமது ஷமி? மேற்கு வங்கத்தில் போட்டியிட வியூகம்.. வெளியான பரபரப்பு தகவல்
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் களமிறக்க பாஜக காய்நகர்த்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. சமீபத்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் முகமது ஷமி அசத்தினார். மொத்தம் அவர் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதோடு உலககோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முகமது ஷமி முதலிடம் பிடித்தார்.

அதன்பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டது. இடது கணுக்கால் காயத்தால் அவதிப்பட்ட முகமது ஷமி அறுவை சிகிச்சை செய்தார். தற்போது அவர் ஓய்வில் உள்ளார். முகமது ஷமி விரைவில் பூரண குணமடைந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர்.
இந்நிலையில் தான் முகமது ஷமி பாஜக சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது முகமது ஷமியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் களமிறக்க பாஜக ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. முகமது ஷமி சொந்த மாநிலம் உத்தர பிரதேசமாகும்.
ஆனாலும் கூட அவர் ரஞ்சி போட்டியில் மேற்கு வங்காளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெங்கால் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும் அந்த மாநிலத்தின் உள்ளூர் போட்டிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார். இதனால் முகமது ஷமிக்கு மேற்கு வங்க மாநிலத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது.
இதனை பயன்படுத்தி கொள்ள பாஜக விரும்புகிறது. அதன்படி முதற்கட்டமாக பாஜக தலைவர்கள் முகமது ஷமியை கட்சியில் இணையும்படி அணுகி உள்ளதோடு, கட்சியில் இணைந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் முகமது ஷமி தற்போதைய சூழலில் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
அதேவேளையில் மேற்கு வங்க மாநிலத்தில் வேட்பாளராக முகமது ஷமியை நிறுத்துவது பற்றி பாஜக தலைவர்கள் விவாதித்துள்ளனர். அப்போது அனைத்து தலைவர்களும் ஒருமனதாக முகமது ஷமியை கட்சிக்கு அழைத்து வரும்படி கூறியுள்ளனர். அதன்பிறகே மேலிடத்தின் ஒப்புதலுடன் முக்கிய தலைவர் முகமது ஷமியை அணுகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications