ஆந்திராவில் ஜெகன் அண்ணாவுக்கு கடும் அதிர்ச்சி.. 25 இடங்களில் 10 சீட்தான் கிடைக்கும்.. India TV சர்வே
அமராவதி: லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 25 இடங்களில் 10 தொகுதிகள்தான் கிடைக்கும் என்கிற India TV-CNX கருத்து கணிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்தே களம் காண்கிறது. ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், பவன் கல்யாணின் ஜனசேனா, பாஜக ஆகியவை கை கோர்த்து மோதுகின்றன.

ஆந்திராவிலும் தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தல்கள் தொடர்பான இதுவரையிலான கருத்து கணிப்புகளில் ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் அண்மைய கருத்து கணிப்புகள் இந்த முடிவுகளை மாற்றிக் கொண்டே வருகின்றன.
News18 தொலைக்காட்சி கடந்த மாதம் வெளியிட்ட ஆந்திரா தொடர்பான தேர்தல் கருத்து கணிப்பில் மொத்தம் உள்ள 25 இடங்களில் 18 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும்; ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 7 தொகுதிகள்தான் கிடைக்கும் என தெரிவித்திருந்தது.
தற்போது India TV-CNX வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள் ஆந்திராவில் மட்டுமல்ல தேசிய அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்து கணிப்பும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவுதான் என்கிறது.
லோக்சபா தேர்தலில் ஆந்திரா மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த India TV-CNX கருத்து கணிப்பு:
மொத்தம் 22 இடங்கள்
தெலுங்குதேசம் -12
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்- 10
பாஜக -3
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 22 இடங்களை அள்ளியது. தெலுங்கு தேசம் கட்சிக்கு வெறும் 3 இடங்கள்தான் கிடைத்தது. அதற்கு முந்தைய 2014-ம் ஆண்டு தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திராவில் மொத்தம் 42 தொகுதிகள் இருந்தன. அதில் தெலுங்குதேசம் கட்சி 16; தற்போதைய தெலுங்கானா பிஆர் எஸ் கட்சி 11, ஜெகன் கட்சி 9 இடங்களைப் பெற்றன. அத்தேர்தலில் பாஜகவுக்கு 3 , காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications