விவசாய நிலங்கள்.. கோடிக்கணக்கில் சொத்து.. அமித்ஷாவின் ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
அகமதாபாத்: உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, குஜராத்தின் காந்திநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த அமித்ஷா தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா, குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக காந்தி நகரில் எம்.எல்.ஏ எம்பியாக இருந்து வரும் அமித்ஷா, வரும் லோக்சபா தேர்தலிலும் அங்கேயே போட்டியிடுகிறார்.

36 கோடி சொத்து: இதற்காக காந்தி நகர் தொகுதியில் வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் அமித்ஷா தனது சொத்து விவரங்கள், வருமானம் உள்ளிட்டவை அடங்கிய பிரமாணப்பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு:- அமித்ஷாவிற்கு சொந்தமாக கார் இல்லை. அவரிடம் அசையும் மற்றும் அசையா சொத்து என மொத்த 36 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது.
அசையும் சொத்து: அதாவது, அசையும் சொத்தின் மதிப்பு ரூ.20 கோடியாகும். அசையா சொத்தின் மதிப்பு 16 கோடி ரூபாயாகும். அமித்ஷாவிடம் 72 லட்சம் மதிப்பிலான நகைகள் உள்ளன. அவருடைய மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்பிலான நகைகள் உள்ளன. அமித்ஷாவின் மனைவி சோனல் ஷாவின் சொத்து மதிப்பு 31 கோடி ரூபாயாகும். இதில், 22.46 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும் அடங்கும்.
ஆண்டு வருமானம்: அமித்ஷாவின் பெயரில் 15.77 லட்சம் லோன் உள்ளது. அவரது மனைவி வங்கியில் பெற்ற கடன் மதிப்பு 26.32 லட்சம் ஆகும். அமித்ஷாவுக்கு கடந்த 2022 - 23 ஆம் ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ.75.09 லட்சம் ஆகும். அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ. 39. 54 லட்சம் ஆகும். அமித்ஷாவிற்கு எம்பி சம்பளம் போக, வீடு மற்று நிலங்களில் கிடைக்கும் வாடகை தொகை, விவசாய வருமானம், பங்குகள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றின் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கிறது.
தான் ஒரு விவசாயி மற்றும் சமூக பணியாளர் என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். அமித்ஷாவிற்கு எதிராக மூன்று கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்தியாவில் 18-வது லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
2வது கட்ட தேர்தல்: கேரளா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 81 தொகுதிகளில் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்றாவது கட்ட தேர்தல் வரும் மே 07 ஆம் தேதி நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் குஜராத்தும் அடங்கும்.
குஜராத் மாநிலங்களில் உள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் அங்கு நடைபெறும் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்ய அவகாசம் முடிந்துள்ளது. இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications