லோக்சபா தேர்தல் 2024: 5ம் கட்ட வாக்குப்பதிவு! 6 மாநிலங்களில் பதிவான வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: 2024 மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. பீகார் 55.62%, ஜம்மு & காஷ்மீர் 58.79%, ஜார்கண்ட் 63.89%, லடாக் 72.02%, ஒடிசா 69.43% மகாராஷ்டிரா 54.33%, உ.பி 57.79%, மேற்கு வங்காளம் 76.64% வாக்குகள் பதிவாகி உள்ளது.

நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

Lok Sabha elections 5th phase Voting starts in 6 states and 2 union pradesh today

5ம் கட்ட தேர்தல்: 2024 மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், நாடு இப்போது ஐந்தாவது கட்ட பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது.

பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 3, லடாக்கில் 1, மகாராஷ்டிராவில் 13, ஒடிசாவில் 5, உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த கட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள ஸ்மிரிதி இராணி போட்டியிடும் அமேதி, ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, லக்னோ மற்றும் கைசர்கஞ்ச்; பீகாரில் சரண்; மற்றும் அனைத்து ஆறு மும்பை மக்களவைத் தொகுதிகள் மற்றும் மகாராஷ்டிராவில் கல்யாண் ஆகிய தொகுதிகள் ஆகும்.

இதுவரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது. 18-வது லோக்சபா தேர்தலில் 4 கட்டங்களில் சராசரி வாக்குப் பதிவு 66.95% ஆகும். லோக்சபா தேர்தலில் இதுவரை 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

4 கட்ட தேர்தல்களிலும் கிராமப் புறங்களை ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் குறைவான வாக்குப் பதிவு பதிவாகி உள்ளது. இன்று நடைபெறும் தேர்தலில் 49 தொகுதிகளுக்கு (பொது தொகுதி-39; எஸ்டி தனி தொகுதி-03; எஸ்சி தனி தொகுதி -07) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இன்று மொத்தம் 695 வேட்பாளர்கள் கணம் காண்கின்றனர்.

8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு ஆக உள்ளது .

இதோடு ஒடிஷா சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது, ஒடிஷாவில் 35 சட்டசபை தொகுதிகளுக்கும் (பொது-21; எஸ்டி-08; எஸ்சி-06;) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

5-வது கட்ட தேர்தலில் 94,732 வாக்குச் சாவடிகள் உள்ளன. 5-வது கட்ட தேர்தல் பணியில் 9.47 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5-ம் கட்டத்தில் சுமார் 8.95 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

இன்று வாக்களிப்போரில் 4.69 கோடி பேர் ஆண்கள்; 4.26 கோடி பேர் பெண் வாக்காளர்கள், 5409 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆவர். 7.81 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.

24,792 வாக்காளர்கள் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள். 7.03 லட்சம் பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆவார்கள். இந்த தேர்தலில் மொத்தம் 153 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 55 பேர் பொது பார்வையாளர்கள், 30 பேர் காவல் பார்வையாளர்கள், 68 செலவின கண்ணாணிப்புப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2000 பறக்கும் படைகள், 2105 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 881 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், தேர்தல் பணிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மொத்தம் 216 சர்வதேச எல்லை சோதனைச் சாவடிகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான 565 எல்லை சோதனைச் சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

5-ம் கட்ட தேர்தல் விஐபி வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:

அமேதி: ஸ்மிருதி இரானி (பாஜக), கிஷோரி லால் சர்மா (காங்கிரஸ்)
ரேபரேலி: ராகுல் காந்தி (காங்கிரஸ்)
லக்னோ: ராஜ்நாத் சிங் (பாஜக)
ஹாஜிபூர்: சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி கட்சி- ராம்விலாஸ்)
சரண்: ரோகினி ஆச்சார்யா (ஆர்ஜேடி), ராஜீவ் பிரதாப் ரூடி (பாஜக)
முசாபர்பூர்: ராஜ் பூஷன் சவுத்ரி (பாஜக)
மும்பை வடக்கு: பியூஷ் கோயல் (பாஜக)
மும்பை தெற்கு: அரவிந்த் சாவந்த் (சிவசேனா- தாக்கரே)
வட-மத்திய மும்பை : உஜ்வல் நிகம் (பாஜக), வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்)
கல்யாண்: டாக்டர் ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா)
பாரமுல்லா: உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+