பியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் வைரல் வீடியோ வெளியிட்ட மமதா.. என்ன காரணம் ?
தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மமதா பானர்ஜி டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்
Recommended Video
மேற்கு வங்கம்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டிவிட்டரில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். மமதா பானர்ஜி பியானோ வாசித்து வீடியோ வெளியிட்டுள்ளார்
லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டு, மதியமே முன்னணி விவரங்கள் தெரிய தொடங்கிவிடும். நாடு முழுக்க மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது.
இந்த லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசமும், மேற்கு வங்கமும் அதிக முக்கியத்துவம் பெற்றது. பாஜக சார்பாக இங்குதான் அதிக அளவில் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றது. அதேபோல் இங்குதான் தேர்தலுக்கு முன் அதிகமாக கலவரங்களும் நடைபெற்றது.

மமதா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இதனால் அதிக கவனத்திற்கு உள்ளனர். இந்த தேர்தலுக்கு பின் மம்தா பானர்ஜி பிரதமராக கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டணி மமதாவை பிரதமராக முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

டிவிட்டரில் வீடியோ
இந்த நிலையில் மமதா பானர்ஜி சார்பாக டிவிட்டரில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை மமதா வெளியிட்டு இருக்கிறார். அம்மா.. தாய் பூமி.. மக்களுக்காக இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன் என்று அவர் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
|
பியானோ வாசிப்பு
மிகவும் சாந்தமாக அமர்ந்து மமதா பானர்ஜி இதில் பியானோ வாசித்துக் கொண்டு இருக்கிறார். இந்த வீடியோ ஐந்து நிமிடம் ஓடுகிறது. ஐந்து நிமிடமும் அமைதியாக, முகத்தில் வேறுபாடு காட்டாமல் மமதா பியானோ வாசித்துக் கொண்டு இருக்கிறார்.

பெரிய வைரல்
இவரின் இந்த வீடியோ பெரிய வைரலாகி உள்ளது. என்ன மமதாவிற்கு இவ்வளவு திறமையா என்று பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் தேர்தல் முடிவுகள் வரும் போது ஏன் இந்த வீடியோவை இவர் வெளியிட்டார், இதற்கு பின் ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications
