லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல்: வடகிழக்கை தக்கவைக்கும் பாஜக கூட்டணி! காங்கிரசுக்கு பின்னடைவு
திஸ்பூர்: லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த கருத்துக்கணிப்பின்படி வடகிழக்கு மாநிலங்களில் பாஜக கூட்டணி தங்களது வெற்றியை தக்க வைத்துக்கொள்ளும் என்று தெரிய வருகிறது.
இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.

பாஜகவை பொறுத்த அளவில், மோடி மீண்டும் பிரதமரானால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை அவர் பெறுவார். அதேபோல, 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்க வேண்டியது முக்கியம்.
காங்கிரஸை பொறுத்த அளவில் ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளில் குலாம் நபி ஆசாத் தொடங்கி பல்வேறு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சென்றுள்ளனர். பல மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்திருக்கிறது. எனவே இந்த முறை மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் கட்சி இருக்கிறது. எனவே ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என முரண்பட்ட கட்சிகளை இந்தியா கூட்டணி என இணைத்து தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
வாக்குச்சாவடிகளில் வாக்களித்துவிட்டு வரும் ஒவ்வொரு 10 வாக்காளர்களில் ஒருவரிடம், யாருக்கு வாக்களித்தீர்கள் என்கிற விவரம் கேட்கப்படும். அவர் கூற விரும்பும் பட்சத்தில் இப்படியாக தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்து கருத்து கணிப்புகளாக வெளியிடப்படும். சி-வோட்டர், ஆக்சிஸ் மை இந்தியா, சிஎன்எக்ஸ் ஆகிய அமைப்புகள் கருத்துக்கணிப்பு நடத்தும் அமைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது தவிர ஏராளமான மீடியாக்கள் கருத்துக்கணிப்பை வெளியிடுகின்றன.
அந்த வகையில் தற்போது வடகிழக்கு மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அசாம் மாநிலத்திற்கான கருத்துக்கணிப்பை நியூஸ் 18 வெளியிட்டிருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 14 லோக்சபா தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 10-13 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்தியா கூட்டணி 2-5 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் மற்ற கட்சிகள் ஜெயிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
சிஎன்பிசி டிவி 18 கணிப்பின்படி, பாஜக கூட்டணி கட்சிகள் 1-11 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 2-5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, பாஜக கூட்டணி கட்சிகள் 9-10 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 1-2 தொகுதிகளிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 1 தொகுதியிலும் மற்றவை ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2019ல் பாஜக 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications