லோக்சபாவில்... பலத்த அமளிக்கு மத்தியில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறியது!
டெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இன்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
கடும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேறியது. முன்னதாக இந்த திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மசோதாவுக்கு ஆதரவாக 352 எம்.பிக்களும், எதிர்த்து 37 பேரும் வாக்களித்தனர்.
முன்னதாக இந்த திருத்த மசோதாவை அனைத்துக் கட்சியினரும் பாரபட்சம் பார்க்காமல் ஆதரித்து நிறைவேற்றித் தர முன்வர வேண்டும் என்று நேற்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மசோதா அமலுக்கு வந்தால் அனைத்து நேரடி வதி விதிப்பு முறைகளிலும் சீர்திருத்தம் ஏற்படும். எனவே அனைத்துக் கட்சிகளும் இதை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
மேலும் வரி விதிப்பு சமச்சீராக இருக்கும் என்றும், வரிக்கு மேல் வரி விதிப்பது தவிர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மற்ற எதிர்க்கட்சிகளம் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இருப்பினும் லோக்சபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் இன்றைய அமளி, காங்கிரஸ் வெளிநடப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் இது நிறைவேறியது.
இருப்பினும் ராஜ்யசபாவில் இது நடக்காது. காரணம், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள்தான் பெரும்பான்மை பலத்துடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ.பி.எஸ் கோரியதும் இதையேதான்
பெட்ரோலியப் பொருட்கள், புகையிலை, மதுபானங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் சமச் சீ்ர் இல்லை. இந்த வரி விதிக்கும் உரிமையைத் தான் தமிழக அரசு கோரியிருந்தது. இது குறித்துத்தான் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications