லோக்சபா தேர்தல்: சபாநாயகர் மீரா குமாரை எதிர்த்து மருமகள் போட்டி
டெல்லி: பீகார் மாநிலம், சஸராம் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் லோக்சபா சபாநாயகருமான மீராகுமாரை எதிர்த்து அவரது மருமகள் மேதவி கிரிதி, மாயாவதி கட்சி சார்பாக நிறுத்தப்பட்டுள்ளார்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜெகஜீவன் ராமின் மகள் மீரா குமார். லோக்சபா சபாநாயகராக இருக்கிறார். பீகார் மாநிலத்தில் அவரது தந்தை போட்டியிட்ட சஸராம் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்த முறையும் இதே தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் ஜெகஜீவன்ராமின் பேத்தியும், மீராகுமாரின் அண்ணன் சுரேஷ் ராமின் மகளுமான மேதவி கிரிதி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு மீராகுமாரை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பினை மாயாவதி வழங்கியுள்ளார்.
இதற்கான அறிவிப்பை பீகார் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பாரத் பிந்த் நேற்று வெளியிட்டுள்ளார்.
சஸராம் தொகுதியில் இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மீரா குமார் குடும்பத்துக்கும், அவரது சகோதரர் குடும்பத்துக்கும் ஏற்கனவே பகை இருந்து வந்துள்ளது. ஜெகஜீவன் ராம் குடும்பத்தை சேர்ந்த அத்தையும் மருமகளும் ஒரே தொகுதியில் எதிர் எதிர் அணியில் போட்டியிடுவது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications