லோக் சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம்.. காங்கிரஸின் வியூகம் என்ன?.. பரபர திட்டங்கள்
நாளை மத்திய பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
டெல்லி: நாளை மத்திய பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதில் கடைசி நேரத்தில் எந்த விதமான மாற்றமும் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
சரியாக 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லோக் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. அதுவும் பாஜக ஆட்சியே மீண்டும் இந்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பின் பல முக்கியமான விஷயங்களும் திட்டமிடலும் இருக்கிறது. அடுத்த வருட தேர்தலை குறிக்கோளாக கொண்டு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே நடந்தது
ஏற்கனவே 2003ல் பாஜக ஆட்சியில் இருந்த போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி வகித்து வந்தது. ஆனால் அப்போதும் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை இருந்தது. 312 பேர் பாஜகவிற்கு ஆதரவு அளித்து பாஜக பெரிய வெற்றி பெற்றது.

பயன் என்ன வந்தது
ஆனால் இதில் தோல்வி அடைவோம் என்று தெரிந்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதற்காக அப்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது. அதேபோல், நம்பிக்கையில்லா தீர்மானம் நடந்த சில மாதங்களில் பெரிய மாநிலங்களில் சிலவற்றில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்தது.

காரணம் ஒன்று
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சிதான் கொண்டு வந்தது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தனியாக தீர்மானம் கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 50க்கும் அதிகமான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இதனால், இந்த தீர்மானம் மூலம் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இருக்கிறது. இது அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

காரணம் இரண்டு
இன்னும் சில மாதங்களில் 5 மாநிலங்களில் வரை தேர்தல் நடக்க இருக்கிறது. மத்திய பிரதேசம் , சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வது பெரிய பலத்தை கொடுக்கும். அதேபோல் பாஜக அத்தனை வலுவாக இல்லை என்ற தோற்றத்தை அம்மாநில மக்களுக்கு இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு செல்லும்.

பிரச்சனைகள் வெளியே தெரியும்
இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் மாநில பிரச்சனைகள் அதிக அளவில் எதிரொலிக்கும். இது எல்லா மாநிலத்திலும் பலமாக மாறலாம் என்று என்று நினைத்துக் கொண்டு இருக்கும் பாஜகவிற்கு பெரிய பிரச்சனையாக மாறும். மாநிலத்தில் பலமாக இருந்த கட்சிகள் , இருக்கும் கட்சிகள் எல்லாம் மீண்டும் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்க இந்த வாக்கெடுப்பு உதவும்.உதாரணமாக இதுவரை அதிமுகவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த பாஜக நாளை அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

நல்ல நேரம்
மிக முக்கியமாக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, அடுத்த வருடம் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மிக முக்கியமான மாற்றத்தை உண்டாக்கும். பாஜக வலுவாக இருக்கிறது என்ற பிம்பத்தை உடைக்க எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பயன்படுத்திக் கொள்ளும். அதேபோல் மாநில கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடவும் இது வழிவகுக்கும்.

பிரச்சனை
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முழுக்க முழுக்க பாஜகவிற்கு எதிராகவே முடியும். முடிவு என்னவோ பாஜக வெற்றி பெறும். பாஜகவிடம் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், இதன் விளைவுகள் பாஜகவிற்கு எதிராகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. நாளை, லோக் சபாவில் மோடி கண்ணீர் விட்டு ஏதேனும் பேசினாலன்றி இந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் மூலம் பாஜக எந்த பலனும் அடைய முடியாது.
-
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
பக்ரீத் விடுமுறையை குறைத்த பாஜக.. மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி உத்தரவு -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு!












Click it and Unblock the Notifications