தினகரன் குறித்து என்னிடம் கேட்காதீர்கள்... டிடிவியுடன் ஒரே பிளைட்டில் சென்ற தம்பிதுரை பேட்டி
டிடிவி தினகரன் மீது போடப்பட்டது பொய் வழக்காகக் கூட இருக்கலாம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைதெரிவித்துள்ளார்.
டெல்லி : அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் பற்றி தன்னிடம் கேட்க வேண்டாம் என்று தம்பிதுரை கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி சென்றுள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அதே விமானத்தில் தான் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் டெல்லி சென்றுள்ளார்.

டெல்லி விமான நிலையம் வந்த தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் டிடிவி தினகரன் மீது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தினகரன் மீது பொய்யான வழக்கு கூட தொடரப்பட்டிருக்கலாம் என்றார்.
தொடர்ந்து கட்சியில் இருந்து தினகரன் நீக்கப்பட்டது குறித்தும் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு தினகரன் குறித்து எதுவும் என்னிடம் கேட்காதீர்கள் என்று எஸ்கேப் ஆனார் தம்பிதுரை.
டிடிவி தினகரன் சென்ற அதே விமானத்தில் தம்பிதுரையும் சென்றது எதேச்சையான சந்திப்பா அல்லது திட்டமிட்ட பயணமா என்று கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications