முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும் மசோதா...லோக்சபாவில் தாக்கலானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவை விளாசிய அதிமுக எம்.பி- வீடியோ

  டெல்லி : இஸ்லாமிய மதத்தில் மனைவிக்கு கணவன் 3 முறை தலாக் சொன்னால் விவாகரத்து செய்யப்பட்டதாக நடைமுறையில் இருக்கும் முறையை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  இஸ்லாமிய மத வழக்கப்படி கணவன் மனைவிக்கு 3 முறை தலாக் கூறினால், அவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டதாக அர்த்தம். இஸ்லாமிய பெண்களின் வாழ்வை பாதிக்கும் இந்த முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் முத்தலாக் முறையை நீக்க சட்டம் இயற்றலாம் என்று அறிவுறுத்தியது. இதனையடுத்து இந்த மசோதாவில் என்னென்ன அம்சங்களை சேர்ப்பது என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்தது.

  முத்தலாக் சொன்னால் கடுமையான தண்டனை

  முத்தலாக் சொன்னால் கடுமையான தண்டனை

  இந்த மசோதாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் முத்தலாக் சொல்வோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை முதல் அபராதமும் விதிக்க வகை செய்யும் மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

  சிறப்பு அம்சங்கள்

  சிறப்பு அம்சங்கள்

  மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

  பாஜகவின் நீண்ட கால முயற்சி

  பாஜகவின் நீண்ட கால முயற்சி

  திருமணம் மற்றும் விவகாரத்து விஷயங்களில் மத ரீதியான நடைமுறைகள் இருப்பதை முடிவுக்கு கொண்டு வர பாஜக நீண்ட காலமாக ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு அம்சமாகவே முத்தலாக் முறைக்கு சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது.

  விஸ்வரூபமெடுத்த முத்தலாக்

  விஸ்வரூபமெடுத்த முத்தலாக்

  மத்திய அரசின் முயற்கிக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய முஸ்லிம் பர்சனல் சட்ட அமைப்பு வாதாடிய போதும், அதன் வாதத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இஸ்லாமிய ஆண்கள் ஸ்கைப், வாட்டஸ் அப் மற்றும் மெசேஜ் மூலம் முத்தலாக் சொல்லிவிட்டு குடும்பத்தை நிராதரவாக விட்டு விட்டு செல்வதாக பல்வேறு புகார்கள் வெளிவந்ததையடுத்து முத்தலாக் விவகாரம் விஸ்வரூபமெடுத்தது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A bill that proposes criminal acction for those who say triple talaq is expected to pass in Loksabha today, the bill has the main aspect of 3 years jail term and fine for muslim men who say triple talaq by any means.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற