அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே... டிவிட்டரில் ‘தாதா’வுக்கு ஹேப்பி பர்த்டே சொன்ன சச்சின்!
மும்பை: தங்களது மிகப் பழைய அரிய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என உதாரணமாக இருந்து இந்திய அணிக்கு வழிகாட்டியவர் கங்குலி. இந்திய அணியின் முன்னேற்றத்திற்காக உழைத்த கங்குலியை தாதா என்றே செல்லமாக அனைவரும் அழைக்கின்றனர்.
நேற்று தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடினார் சவுரவ் கங்குலி. அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
#HappyBirthdayDada @SGanguly99, stay young as always!!! pic.twitter.com/msoUd3IN9Q
— sachin tendulkar (@sachin_rt) July 8, 2015 இந்நிலையில், தனது நண்பர் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறும் விதமாக பழைய அரிய புகைப்படம் ஒன்றைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சச்சின். அதில், ‘ஹேப்பி பர்த்டே கங்குலி. என்றும் இளமையாக வாழ வாழ்த்துக்கள்' என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டும் ஜனவரி மாதம் நடந்த போட்டியில் இந்திய அணிக்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து களமிறங்கினர். அதனைத் தொடர்ந்து இருவரும் ஆரம்ப ஆட்டக்காரர்களாக சேர்ந்து விளையாடி பல சாதனைகளை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications