For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாழவைக்கும் காதலுக்கு ஜே!!: காதல் பறவைகளுக்கு அடைக்கலம் அளிப்பாரா கெஜ்ரிவால்?

Google Oneindia Tamil News

டெல்லி: காதலர்களின் குறைகளைக் களைய ஆணையம் அமைக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மனு அளிக்கபோவதாக தலைநகரில் உள்ள காதல் அமைப்பு கூறியுள்ளது.

டெல்லியில் காதலர்களுக்காக காதல் தர்மம் என்ற பெயரில் காதலர்களுக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது.அதன் தலைவர் ஷசாங் ஆனந்த் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தது உங்களுக்காக சென்னை தமிழில்:-

"இதுனால எல்லார் கைலயும் நான் சொல்லிக்கறது இன்னானா பொண்ணுங்களை பாதுக்காக ஆணையம் அமைக்கறீங்க.மனுசங்களை பாதுக்காக ஆணையம் அமைக்கறீங்க.இப்படிக்கா இருக்கறப்போ இன்னாத்துக்கு காதலை பாதுக்காக்க ஆணையம் அமைக்ககூடாதுன்றேன்?!

“Love tharma” requesting kejrival to form lover’s rights commission …

காதல் பன்றவங்க கலீஜான இடத்துக்கலாம் போகங்காட்டி இருக்கனும்னா அவங்களுக்கு பூங்காள கடலை போடறதுக்கும்,ஓட்டல்ல ரூம் போடறத்துக்கும் பர்மிசன் கிராண்ட் தரனும்.

அப்பாலிக்கா டெல்லில இருக்கற எல்லா எஜுகேசன் இஸ்கூல்லையும் காதலைப்பத்தி பாடம் வைக்கனும்...அதுங்காட்டி அங்கன எப்படி மனசுக்குள்ற அடங்கினு இருக்கறதுனு கத்துதரணும்,

இதைலாம் முதலமைச்சர் கெஜ்ரிவால் ஏத்துகிரனும்.இல்லையினா இந்த தபா அவரு குடிசையாண்ட இருக்க சொல்ல போராட்டம் நடத்த போறோம்.அப்படிக்காவும் ஒத்துக்கலைனாக்க ஜந்தர் மந்தர்ட்ட தர்ணா பன்னுவோம்.

அவரும் காதல்ல செயிச்சு கல்யாணம் கட்டிகினவருதான்..அவருக்கு எங்க பீலிங்ஸ் நல்லா தெரியும்" என்று தெரிவித்தார்.

கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி வீட்டில் வை என்பதுபோல் நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் இது போன்ற பத்தாம்பசலிகள் அதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை என்பதற்கு இதுவே உதாரணம்.

English summary
A lovers association called “love tharma” in Delhi told that they going to request kejirval to forming a lover’s commission for fulfill their needs and protect the lover’s rights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X