பிகினி அணிந்து சேவை செய்யும் விமானப் பணிப்பெண்கள்... இந்தியாவிற்கு வருகிறது வியட்ஜெட் நிறுவனம்!
விமானப் பணிப்பெண்கள் பிகினி உடை அணியும் வியட்ஜெட் நிறுவனம் இந்தியாவிற்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video

டெல்லி: விமானப் பணிப்பெண்கள் பிகினி உடை அணிந்து சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகளவில் மிக குறைவான கட்டணத்தில் விமான சேவை அளித்து வரும் நிறுவனங்களில் ஒன்று வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வியட்ஜெட் நிறுவனம்.

கடந்த 2007ம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது பயணிகளை ஈர்க்கும் முயற்சியாக குறைந்த கட்டணம் மட்டுமின்றி, மற்றொரு புதுமையை வியட்ஜெட் அறிமுகப்படுத்தியது.
அதாவது, இதன் விமானத்தில் விமானி முதல் பணிப்பெண்கள் வரை அனைவரும் பிகினி உடை அணிந்து வேலை பார்த்தனர். இது பெரும் சர்ச்சையில் சிக்கியது.
2012ம் ஆண்டு 23 வயதுக்குஉட்பட்டோர் கால்பந்து போட்டியில் உஸ்பேகிஸ்தான் அணியிடம் தோல்வியுற்ற சோகத்தில் திரும்பிய வியட்நாம் அணியை, பிகினி அணிந்த விமானப் பணிப்பெண்கள் உற்சாகப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு ஆளானது.
விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த பிகினி விளம்பரத்தாலும், குறைந்த கட்டணத்தாலும் வியட்ஜெட்டிற்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது 17 மில்லியன் வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் ஜூலை முதல் இந்த சேவை இந்தியாவிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாரத்தில் நான்கு நாட்கள் டெல்லியில் இருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகருக்கு பிகினி ஏர்லைன் சேவை தொடங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இரு நாட்டுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாகவும், 45-வது ஆண்டு தூதரக உறவை கொண்டாடும் விதமாகவும் இந்த சேவை அறிமுகப்படுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.
வியட்நாம் தலைநகரில் இருந்து டெல்லிக்கு நேராக விமான சேவை இல்லாத நிலையில் வியட்ஜெட் இந்த சேவையை வழங்க உள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த விமான நிறுவனத்தின் பிகினி சேவை அனுமதிக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications