சூப்பர் சைக்ளோனாகும் "அஷோபா"!! அரபிக் கடலில் உருமாறும் புயல் சின்னம்!!!

Subscribe to Oneindia Tamil

அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருமாறியுள்ளது.

இந்த புயலுக்கு அஷோபா என பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரபிக் கடலில் கிழக்கு மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து வடக்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக கூறியுள்ளது.

 Low Depression intensifies as cyclone in Arabian sea

அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தப் புயல் சூப்பர் சைக்ளோனாக உருவெடுக்கலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆறு மணி நேரத்தில் தீவிரமடைந்த இந்தப் புயலுக்கு அஷோபா எனப் பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தப் புயல் வலுப்பெற்று சூப்பர் சைக்ளோனாக உருவெடுக்கலாம் என்றும், இருப்பினும் புயல் இந்தியாவில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்" எனவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+