அகிலேஷ் யாதவுக்கு எதிராக பாஜக மகளிர் அணியினர் போராட்டம்– தண்ணீர் பீய்ச்சி கலைப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜகவின் மகளிர் அணியினர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து போலீசார் கூட்டத்தை கலைத்துள்ளனர்.
உத்தரபிரேத மாநிலம், படான் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் கடந்தவாரம் தலித் சிறுமிகள் 2 பேர் ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். பின்னர் இருவரையும் கொன்று ஒரு மாமரத்தில் தொங்கவிட்டனர்.
சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்தரை செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவின் மகளிர் அணியினர் லக்னோவில் முதல்வர் அகிலேஷ் யாதவின் அலுவலகத்திற்கு வெளியே கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாஜகவினரை தடுக்க போலீசார் அப்பகுதியில் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். பாஜகவினர் மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களை விரட்ட போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றனர். ஆனால் பாஜகவினர் அங்கு இருந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications