வால்மீகி பற்றி சர்ச்சை கருத்து.. நடிகை ராக்கி சாவந்திற்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்!
நடிகை ராக்கி சாவந்திற்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து லூதியான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லூதியானா: ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை ராக்கி சாவந்திற்கு லூதியானா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்துள்ளது.
இந்தி பட உலகில் தனது படுபயங்கர கவர்ச்சியால் அனைவரையும் கதிகலங்க வைத்தவர் ராக்கி சாவந்த். சர்ச்சைக்கு பெயர் போன இவர், கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது ராமாயணம் எழுதிய வால்மீகி குறித்து ஆபாசமான கருத்தைக் கூறி இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியதாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த நரிந்தர் ஆதியா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் வால்மீகி சமூகத்துக்கு எதிராகவும் இந்து மதத்தை புண் படுத்தும் வகையிலும் ராக்கி சாவந்த் பேசி வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு குறித்து லூதியானா நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை ராக்கி சாவந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராவதை ராக்கி சாவந்த் தவிர்த்து வந்தார். இந்நிலையில் மீண்டும் நடிகை ராக்கி சாவந்திற்கு லூதியானா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications