பினாமி ஆட்சியை அகற்ற.. நியாயம் வழங்க.. ஜனாதிபதியிடம் மு.க ஸ்டாலின் புகார்
தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டசபையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலைக்கு நியாயம் கேட்க ஜனாதிபதியை சந்திக்கப் போவதாகவும் அவர
டெல்லி: சட்டசபையில் திமுகவினர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து புகார் அளிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
சென்னையில் இருந்து புறப்பட்ட ஸ்டாலின், டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி ஆட்சியை அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழர்களும் எதிர்த்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் இந்த ஆட்சியை சகித்துக் கொண்டு இருக்க வேண்டிய சூழல் தமிழகத்தில் இருக்கிறது.
அதிமுகவினர் சட்டமன்றத்திலே பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஜனநாயகப் படுகொலையை செய்திருக்கிறார்கள். இதுகுறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகரிடம் புகார் தெரிவித்திருக்கிறோம். உயர்நீதிமன்றத்திற்கு சென்று நீதியை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். என்றாலும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட வேண்டும் என்று நாங்கள் நேரம் கேட்டிருந்தோம். இன்று மாலை அவர் எங்களுக்கு நேரம் ஒதுக்கித் தந்துள்ளார்.
அவரை மாலை சந்திக்கும்போது, சட்டசபையில் நடந்த விவரங்களை அவரிடம் தெரிவிக்க உள்ளோம். சட்டமன்றத்தில் முறையாக வாக்கெடுப்பு நடைபெறவில்லை. அதை முறைப்படுத்தி நியாயம் வழங்க, நீதி நிலைநாட்ட வேண்டுகோள் வைக்கப்படும்.
மு.க. ஸ்டாலினுடன் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனும் உடன் சென்றுள்ளார். இவர்கள் இருவருடன் திமுக எம்பிக்களும் இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications