ஆந்திராவை கலக்கும் 'க்ரேஜிவாலா' போஸ்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்று தெலுங்கு நகைச்சுவை நடிகர் எம்.எஸ். நாராயணா நடிக்கும் க்ரேஜிவாலா படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

ஆந்திராவில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போஸ்டர்களில் பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் எம்.எஸ். நாராயணா ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் போன்று உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

போஸ்டரை சட்டென்று பார்த்தால் அது கெஜ்ரிவாலோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

க்ரேஜிவாலா

க்ரேஜிவாலா

இயக்குனர் மோகன் பிரசாதா நகைச்சுவை நடிகர் எம்.எஸ். நாராயணாவை வைத்து எடுக்கும் படம் க்ரேஜிவாலா- பயமும் இல்லை, ஓய்வும் இல்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தான் துவங்கியது.

கெஜ்ரிவாலா?

கெஜ்ரிவாலா?

படத்தில் கெஜ்ரிவால் போன்று நான் நடிக்க மாட்டேன் என்று நாராயணா தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப வசத்தால் அரசியலுக்கு வருகிறான். அந்த சாமான்யனாக நடிக்கிறேன். பார்க்கத் தான் நான் கெஜ்ரிவால் போன்று இருப்பேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காமெடி

காமெடி

வாக்காளர்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் தான் க்ரேஜிவாலா. இந்த படம் மக்களை சிந்திக்க வைக்கும். படத்தில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும் என்றார் இயக்குனர் மோகன் பிரசாதா.

ராஜசேகர ரெட்டி

ராஜசேகர ரெட்டி

ஜெய் ராஜசேகர முஹுரத் என்ற படத்தில் நடிகர் சுமன் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜகசேகர ரெட்டியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+