இந்திரா ஒருமைப்பாட்டு விருது 2012: ‘பசுமைப்புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் தேர்வு
டெல்லி: இந்திர ஒருமைப்பாட்டு விருதுக்கு வேளாண்துறை விஞ்ஞானியும், பசுமைப்புரட்சித் திட்டத்தின் தந்தை என அழைக்கப் படுகிறவருமான எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான இந்த விருதுக்கு வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தேர்வாகியுள்ளார்.
இந்த விருதோடு ரூ 5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட இருக்கிறது. இந்த தகவலை விருது குழுவின் உறுப்பினர் செயலாளர் மோதிலால் வோரா தெரிவித்தார்.

பசுமைப்புரட்சியின் தந்தை....
வேளாண்மைத்துறை விஞ்ஞானியும் பசுமை புரட்சி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன், தாவரயியலில் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

பல்வேறு பணிகளில்....
தற்போது 88 வயதாகும் எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த 1966-ம் ஆண்டு முதல் 1972 வரை டெல்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய இயக்குனராகவும் 1972-ம் ஆண்டு முதல் 1979 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சித்துறையின் பொது இயக்குனராகவும், இந்திய அரசு வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் துறையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்....
தமிழ்நாட்டை சேர்ந்தவரான இவரது பெயரில் சென்னையில் பெரிய அளவில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விருது வழங்கும் விழா....
விருது வழங்கும் விழா வரும் 31-ந் தேதி இந்திராகாந்தி நினைவு தினத்தன்று டெல்லியில் நடக்க இருக்கிறது.

இதற்கு முன்...
இதற்கு முன்பு இந்திராகாந்தி நினைவு தேசிய ஒருமைப்பாட்டு விருது, அருணா ஆசப்அலி, பி.என்.ஹாக்சர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஏ.பி.ஜே.அப்துல்கலாம், சங்கர் தயாள் சர்மா, ராஜீவ்காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications