மொபைல் எண் இலக்கம் 13க்கு மாறுகிறதா?... பதறாதீங்க உண்மையான விஷயமே வேற!
மொபைல் எண்களின் இலக்கை 10ல் இருந்து 13 ஆக மாற்ற மத்திய தொலைதொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்களை வழங்கும்படி அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களையும், தொலை தொடர்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்த 13 இலக்க எண்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவில் செயல்படும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்புத் துறை கடந்த ஜனவரியில் அனுப்பிய சுற்றறிக்கையில் அதில் இனி புதிதாக அளிக்கப்படும் அனைத்து மொபைல் எண்களும் (M2M) 10 இலக்கங்களுக்கு பதிலாக 13 இலக்கமாக மாற்றப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னெடுப்பை நடவடிக்கையை தொலைதொடர்புத் துறை எடுத்துள்ளது. இதன் காரணமாக இனி நாம் பயன்படுத்தும் 10 இலக்க மொபைல் எண்கள் இனி 13 இலக்க எண்ணாக மாறுமா என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

மக்கள் அச்சம்
மொபைல் எண்கள் 10 இலக்கத்திலிருந்து 13 இலக்கமாக விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பயன்படுத்தும் மொபைல் எண்கள் மாறிவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால் உண்மையில் மாறப் போவது சிம் கார்டு நம்பரல்ல.

எம்2எம் இலக்கம் 13 ஆகிறது
நாம் தற்போது பயன்படுத்தி வரும் சிம்களில் M2M (machine2machine) எண்ணானது 10 இலக்கம் கொண்டதாக இருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்கும் பொருட்டு 13 இலக்க M2M எண்ணை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அளிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 கடைசி தேதி
இதன் காரணமாக புதிய சிம்கள் இனி 13 இலக்கங்கள் (M2M) கொண்டதாக இருக்கும். தற்போது பயன்படுத்தி வரும் சிம்களும் வரும் அக்டோபர்1ஆம் தேதி முதல் 13 இலக்கங்கள் கொண்டதாக மாற்றப்படும். இதற்கான இறுதி காலக்கெடுவாக டிசம்பர் 31ஆம் தேதியை தொலைத்தொடர்பு அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.

மெஷின் - மெஷின் எண் மட்டுமே மாறுகிறது
10 இலக்கங்கள் கொண்ட நம்முடைய மொபைல் எண் இனி 13 இலக்கம் கொண்டதாக மாற உள்ளதாக பொதுமக்கள் தவறாக நினைத்துவிடக் கூடும்.
M2M அதாவது machine2machine எண் மட்டுமே 13 இலக்கம் கொண்டதாக மாற்றப்பட உள்ளதால் நாம் பயன்படுத்தி வரும் சிம்கள் 10 இலக்கம் கொண்டதாகவே நீடிக்கும். இது மெஷின் - மெஷின் தொடர்புக்கு மட்டுமே ஆனது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications