மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள்.. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் முன்னிலை
மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் புத்னி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ம.பி.யில். காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் புத்னி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.

இதில் பாஜக தொடக்கத்திலேயே முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது. பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் புத்னி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
தபால் வாக்குகள் அனைத்தும் பெரும்பாலும் சிவராஜ்சிங் சவுகானுக்கு விழுந்து உள்ளது. 15 வருடமாக அங்கு பாஜக கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications