கோஹ்லி தேசபக்தரா? பாஜக எம்எல்ஏ கிளப்பும் பூதம்
இந்திய கிரிக்கெட் கேப்டர் விராட் கோஹ்லி தேச பக்தரா என்று பாஜக எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

போபால் : மத்திய பிரதேச மாநிலம் குனா தொகுதியின் பாஜக எம்எல்ஏ பன்னா லால் சக்யா, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி தேசபக்தர் தானா என்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். ராமர், கிருஷ்ணன் இந்தியாவில் திருமணம் செய்த போது கோஹ்லி மட்டும் இத்தாலியில் திருமணம் செய்துள்ளாரே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குனா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னா லால் சாக்யா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி குறித்து ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். கோஹ்லி உண்மையில் தேசபக்தர் கிடையாது, அப்படி தேச பக்தி உள்ளவராக இருந்தால் அவர் இத்தாலியை தனது திருமணத்திற்கா தேர்வு செய்திருக்க மாட்டார் என்று அவர் கூறியுள்ளார்.
கோஹ்லி பணம், புகழ் அனைத்தையும் இந்தியாவில் சம்பாதித்தார் ஆனால் திருமணத்திற்கு இத்தாலியை தேர்வு செய்திருக்கிறார். பகவான் ராமர் இந்த மண்ணில் தான் திருமணம் செய்து கொண்டார், அதே போல கிருஷ்ணரும் இங்கு தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர் மட்டும் இத்தாலி சென்று திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

கோஹ்லி முன்மாதிரி இல்லை
விராட் கோஹ்லிக்கு தேசபக்தி இல்லை. அவர் இந்தியர்களின் முன்மாதிரி இல்லை. நாட்டிற்கு உண்மையாக இருப்பவர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கத் தகுதியுடையவர்கள் என்றும் பன்னா லால் சாக்யா தெரிவித்துள்ளார்.

அனுஷ்காவையும் விட்டுவைக்கவில்லை
இதே போன்று பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவுக்கும் தேச பக்தி என்பதே இல்லை என்றும் சாக்யா கூறியுள்ளார். குனாவில் இந்திய திறனாய்வு மையத் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பதிலடி
இத்தாலியில் நடனமாடியவர்கள் எல்லாம் இந்தியாவில் கோடீஸ்வரர்களாக உள்ளனர். விராட் கோஹ்லி நாட்டில் சம்பாதித்த செல்வத்தை வெளிநாட்டில் செலவு செய்திருக்கிறார். பாஜக எம்எல்ஏவின் விராட் கோஹ்லி குறித்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது. குஜராத் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் 2018ல் மத்திய பிரதேசத்தில் நடக்கும் தேர்தலை குறி வைத்து தேச பக்தி பிரச்னையை பாஜக எழுப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

தேசபக்தி ஸ்லோகன் எதற்காக?
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு வியாபம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கிறது. எஎனவே தேசபக்தி என்ற கோஷத்துடன் மக்களை அணுகத் தொடங்கியுள்ளனர், ஆனால் அவர்களின் இந்த செயல்பாடுகள் எடுபடாது என்றும் காங்கிரஸ் கட்சியில் மத்திய பிரதேச மாநில செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
-
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications