இருமல் சிரப்பால் 20 குழந்தைகள் மரணம்.. "தமிழக அரசே முழு காரணம்!" மபி அமைச்சர் பரபர குற்றச்சாட்டு
போபால்: தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில், தரத்தைச் சரிபார்க்காத தமிழ்நாடு அரசே இந்தப் பலிகளுக்கு காரணம் என மத்தியப் பிரதேச சுகாதார இணை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் குடித்ததில் குழந்தைகளுக்குச் சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டது. அந்த மருந்து தரமற்று இருந்த நிலையில், அதைக் குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் அந்த மருந்தைத் தயாரித்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் ( Sresan Pharmaceutical Manufacturer) நிறுவனம் என்பது தெரிய வந்தது.

ஆலை மூடல்
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள அதன் உற்பத்தி ஆலை மூடப்பட்டது. அந்த ஆலையில் இருந்து எடுக்கப்பட்ட இருமல் மருந்து மாதிரிகள் "கலப்படம்" செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், மருந்து உற்பத்தியை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது. அந்த மருந்துகளை மார்கெட்டில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசே காரணம்
இதற்கிடையே இது தொடர்பாக மத்தியப் பிரதேச அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் சில பரபர கருத்துகளைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளைச் சரிபார்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கே இருப்பதாகக் குறிப்பிட்ட நரேந்திர சிவாஜி, மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழக்கத் தமிழக அரசே காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அலட்சியத்தைக் காட்டியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து மருந்துகளையும் மத்தியப் பிரதேச அரசு சரிபார்க்கிறது என்று கூறிய இவர் இந்த குறிப்பிட்ட இருமல் மருந்து இருப்பு எதிர்பாராத விதமாகப் பரிசோதனை செய்யப்படாமல் போனது என்றும் படேல் கூறினார்.
தமிழக அரசின் அலட்சியம்
மத்தியப் பிரதேச பொதுச் சுகாதாரம் இணை அமைச்சரான சிவாஜி படேல் மேலும் பேசுகையில், "மருந்து தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டதால், அதற்கு உரிமம் வழங்குவதும், மருந்தைச் சரிபார்ப்பதும் அந்த மாநிலத்தின் பொறுப்பு.. உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பேட்ச் மருந்துக்கும் பகுப்பாய்வுச் சான்றிதழ் (COA) வழங்கப்பட வேண்டும். இதில் தமிழ்நாடு அரசு எங்கே தவறு செய்தது? உரிய பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதா இல்லையா? எந்த அதிகாரி தவறு செய்தார் என்பது விசாரிக்க வேண்டும். குறைபாடு கொண்ட மருந்து தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. இது அவர்களின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.
எங்கள் மாநிலத்திற்கு வரும் மருந்துகளை நாங்கள் ரேண்டமாக சரிபார்க்கிறோம். தற்செயலாக இந்த மருந்துகள் பரிசோதனை செய்யப்படவில்லை. அதேநேரம் இங்குத் தயாரிக்கப்படும் மருந்துகளை நாங்கள் தீவிரமாகச் சரிபார்க்கிறோம்.. தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியமே இங்குக் குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம்.. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் எழுதி வருகிறோம்.
நடவடிக்கை
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்த மருந்துத் தொழிற்சாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். மபி போலீசார் அந்த நபரைக் கைது செய்யத் தமிழ்நாடு சென்றுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலத்தில் சோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை அரசு அதிகரித்து வருகிறது.. சோதனைகளை விரைவுபடுத்தத் தனியார் ஆய்வகங்களிலும் சோதனை நடத்தப்படும்" என்றார்.
குஜராத்தில் உள்ள ஒரு வந்த மற்றொரு தரமற்ற மருந்து குறித்து கேள்விக்கு அவர், "தரமற்ற மருந்துகள் எங்கிருந்து வந்தாலும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் நாங்கள் கடிதங்கள் எழுதி வருகிறோம்" என்றார்.
அரசியல் செய்யும் காங்கிரஸ்
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல் காந்தி மபி வருவதாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில், அது குறித்த கேள்விக்கு, "தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுக்குக் காங்கிரஸ் ஆதரவு இருக்கிறது.. இது ஏன் நடந்தது என்று ராகுல் காந்தி தன் கட்சியின் கூட்டணிக் கட்சியிடம் தான் கேட்க வேண்டும். இந்த விஷயத்தைக் காங்கிரஸ் அரசியலாக்கினால், இதில் ஒரு சதி இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்" என்றார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications