ஐ லவ் யூ சொன்னவருக்கு பறக்கும் முத்தம்.. மத்திய பிரதேச முதல்வர் கலகல!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஐ லவ் யூ சொன்னவருக்கு முத்தம் கொடுத்த முதல்வர்-வைரல் வீடியோ

போபால்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ஆதரவாளருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முதல்வராக உள்ளார். 58 வயதான இவர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

Madhya pradesh Chief minister Shivraj singh chouhan gave flying kiss to his supporter

அப்போது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவரது ஆதரவாளர் ஒருவர் மாமாஜி ஐ லவ் யூ என்றார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் லவ் யூ டூ என்றார். மேலும் அந்த ஆதரவாளருக்கு பறக்கும் முத்தத்தையும் கொடுத்தார் சவுகான்.

இதனால் மகிழ்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் ஓவென கத்தியதோடு கைத்தட்டியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் சிரித்தபடியே நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madhya pradesh Chief minister Shivraj singh chouhan gave flying kiss to his supporter in bhopal.
Please Wait while comments are loading...