ஆஹா.. காங்கிரசுக்கு மத்திய பிரதேசம் ஈஸி இல்லை.. இழுபறிதானாம்.. பாஜக கடும் ஃபைட் - டிவி9 எக்சிட் போல்
போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என டிவி9 - போல்ஸ்ட்ராட் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும், சில தொகுதிகள் மட்டுமே பாஜக - காங்கிரஸ் இடையே வித்தியாசம் நிலவுகிறது.
மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோராம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளன. 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவும் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 2018ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசத்தில் சில தொகுதிகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முதலில் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக செய்த ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜகவுக்கு ஆதரவு அளித்ததால் காங் ஆட்சி கவிழ்ந்தது.
இந்நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீட்க காங்கிரஸ் கட்சியும் கங்கணம் கட்டி தேர்தலில் இறங்கின. மத்திய பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டிவி9 போல்ஸ்ட்ராட் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய பிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், காங்கிரஸ் கட்சியின் கையே சற்று ஓங்கியிருக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. மத்திய பிரதேசத்தில் டிவி9 போல்ஸ்ட்ராட் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு விவரம்:
மொத்த தொகுதிகள்: 230
காங்கிரஸ்: 111 - 121
பாஜக: 106 - 116
மற்றவை: 0 - 6
மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை. காங்கிரஸ் கட்சி 111-121 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 106-1116 இடங்கள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ல் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வென்றிருந்த நிலையில் தான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனால், மீண்டும் அதுபோன்ற சூழல் வரக்கூடாது, தனிப்பெரும்பான்மையுடன் வெல்ல வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. கருத்துக்கணிப்பு பலிக்குமா? டிசம்பர் 3 வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications